Apple WWDC 2022: M2 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ.. இந்திய விலை எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jun 7, 2022, 6:48 AM IST

M1 பிராசஸரை விட பல்வேறு அம்சங்களில் தனித்து விளங்கும் வகையில் சக்திவாய்ந்த ஒன்றாக புதிய M2 சிப்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனம் நேற்று நள்ளிரவு நடைபெற்ற WWDC 2022 வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் முற்றிலும் புதிய M2 சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட் தலைசிறந்த CPU மற்றும் கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. முந்தைய M1 பிராசஸரை விட பல்வேறு அம்சங்களில் தனித்து விளங்கும் வகையில் சக்திவாய்ந்த ஒன்றாக புதிய M2 சிப்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிராசஸர் மட்டும் இன்றி ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்தப்படி புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் முற்றிலும் புதிய சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. 

Tap to resize

Latest Videos

முற்றிலும் புதிய M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ள முதல் மாடலாக 2022 மேக்புக் ஏர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2022 மேக்புக் ஏர் மாடல் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது, முற்றிலும் புது டிசைன் கொண்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மேக்புக் ஏர் மாடல் மிக மெல்லியதாகவும், குறைந்த எடையை கொண்டுள்ளது. 2022 மேக்புக் ஏர் மாடல் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இந்த லேப்டாப் சில்வர், ஸ்பேஸ் கிரே, மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

2022 மேக்புக் ஏர் அம்சங்கள்:

- 13.6 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- முந்தைய மாடலை விட 20% அதிக பிரைட்னஸ் கொண்டுள்ளது
- 8 கோர் CPU, 8 கோர் GPU
- 8GB யுனிஃபைடு மெமரி
- 256GB / 512GB SSD ஸ்டோரேஜ்
- புதிய M2 சிப்செட்
- 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்
- 1080P ஃபேஸ்டைம் HD கேமரா
- 2 தண்டர்போல்ட் / 4 யு.எஸ்.பி. போர்ட்கள்
- ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட்
- ஸ்டீரியோ ஆடியோ
- மேஜிக் கீபோர்டு மற்றும் டச் ஐடி
- ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
- நாள் முழுக்க பேட்டரி பேக்கப், 18 மணி நேர வீடியோ பிளேபேக்
- 30 வாட் யு.எஸ்.பி. சி அடாப்டர்
- 35 வாட் யு.எஸ்.பி. சி அடாப்டர் (512GB மாடல்)

13 இன்ச் மேக்புக் ப்ரோ (2022) அம்சங்கள்: 

- 13 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- 8 கோர் CPU, 10 கோர் GPU
- 8GB யுனிஃபைடு மெமரி
- 256GB / 512GB SSD ஸ்டோரேஜ்
- புதிய M2 சிப்செட்
- மேஜிக் கீபோர்டு
- டச் பார் மற்றும் டச் ஐடி
- ஃபோர்ஸ் டச் டிராப்பேட்
- 2 தண்டர்போல்ட் / 4 யு.எஸ்.பி. போர்ட்கள்
- 20 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப்

இந்திய விலை விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய M2 மேக்புக் ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என துவங்குகிறது. புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. 

click me!