ரூ. 12,999 விலையில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்... இதுல என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jun 6, 2022, 4:58 PM IST

புதிய ஹானர் வாட்ச் உஏ 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ப்ளூடூத் காலிங் மற்றும் இதர ஸ்மார்ட் கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

HONOR Watch GS 3 with Bluetooth calling launched in India

பல்வேறு டீசர்களை தொடர்ந்து ஹானர் நிறுவனம் இந்திய சந்தையில் ஹானர் வாட்ச்  GS 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹானர் வாட்ச்  GS 3 மாடலில் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், 3D வளைந்த கிளாஸ், 100-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்கள், 10-க்கும் அதிக ப்ரோபஷனல் ஸ்போர்ட்ஸ் மோட்கள், 85 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இத்துடன் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் புதிதாக 8 சேனல் PPG சென்சார் மாட்யுல், AI ஹார்ட் ரேட் சென்சார், பயனர்களின் ஸ்லீப், ஸ்டிரெஸ் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன.  மேலும் இதில் ப்ளூடூத் காலிங் மற்றும் இதர ஸ்மார்ட் கண்ட்ரோல் அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஹானர் வாட்ச்  GS 3 மாடலில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பயன்படுத்த முடியும். 

Tap to resize

Latest Videos

undefined

ஹானர் வாட்ச்  GS 3 அம்சங்கள்:

- 1.43 இன்ச் 466x466 பிக்சல் AMOLED 3D வளைந்த டிஸ்ப்ளே
- 32MB ரேம்
- 4GB இண்டர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஐ.ஓ.எஸ். 9 
- அக்செல்லோமீட்டர் சென்சார்
- கைரோஸ்கோப் சென்சார்
- ஆம்பியன்ட் லைட் சென்சார்
- ஏர் பிரெஷர் சென்சார் 
- மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் 
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (5ATM)
- 100+ ஒர்க் அவுட் மோட்கள்
- ப்ளூடூத் 5, பெய்டு, GPS (L1/L5), NFC
- 14 நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப்

விலை விவரங்கள்:

ஹானர் வாட்ச் GS 3 மாடல் ஓசன் புளூ, மிட்நைட் பிளாக் மற்றும் கிளாசிக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹானர் வாட்ச் GS 3 மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நாளை (ஜூன் 7)  துவங்க இருக்கிறது. 

vuukle one pixel image
click me!