Apple WWDC 2022: பாரபட்சமே இல்லை.. அப்டேட்களை வாரி வழங்கிய ஆப்பிள்.... இத்தனை மாற்றங்களா?

By Kevin Kaarki  |  First Published Jun 7, 2022, 7:48 AM IST

சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய M2 சிப்செட்டை அறிமுகம் செய்து இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC 2022) நிகழ்வு நேற்று (ஜூன் 6 ஆம் தேதி) துவங்கியது. டிம் குக் துவக்க உரையுடன் துவங்கிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய M2 சிப்செட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் M2 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. WWDC நிகழ்வின் மிக முக்கிய அம்சங்கள் ஆக இருக்கும் மென்பொருள் பற்றி ஏராளமான புது அப்டேட்களை அறிவித்தது. 

ஐ.ஓ.எஸ். 16:

Tap to resize

Latest Videos

அதன்படி ஐபோன் மாடல்களில் சப்போர்ட் செய்யும் புது ஐ.ஓ.எஸ். 16 அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏராளமான அம்சங்கள் நிறைந்த ஐ.ஓ.எஸ். 16 வெர்ஷனில் மேம்பட்ட லாக் ஸ்கிரீன், வால்பேப்பர், விட்ஜெட்களில் அசத்தல் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஐ.எஸ். 16 வெர்ஷனில் மெசேஜஸ், மெயில், டிக்டேஷன், லைவ் டெக்ஸ்ட், விஷூவல் லுக் அப், ஆப்பிள் வாலெட், ஆப்பிள் மேப்ஸ், ஆப்பிள் நியூஸ், பேரண்டல் கண்ட்ரோல், பிட்னஸ், ஹெல்த் என அதிகளவு மாற்றங்கள்  மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

வாட்ச் ஓ.எஸ். 9-இல் மேம்பட்ட ஹெல்த் டிராக்கிங், புதிய வாட்ச் ஃபேஸ்கள், AFib ஹிஸ்ட்ரி என பல்வேறு புது அம்சங்களை கொணடுள்ளது. இத்துடன் வெவ்வேறு ஸ்போர்ட் மோட்களுக்கு ஏற்ப பயனர்களுக்கு பயனுள்ள விவரங்களை வழங்கும் வகையில் புதுப்புது மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. 

மேக் ஓ.எஸ்.  வெண்ட்யுரா:

இத்துடன் மேக் சாதனங்களில் இயங்கும் மேக் ஓ.எஸ். புது வெர்ஷன் மேக் ஓ.எஸ்.  வெண்ட்யுரா பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது மேக் சாதனங்களில் மல்டி டாஸ்கிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும் புதிய சஃபாரி பிரவுசர், பிரீலோடெட் செயலிகள், ஐபோனினை வெப்கேமராவாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் மேம்பட்ட மெயில் ஆப், சர்ச் என புது அம்சங்கள் உள்ளன.

மேக் ஓ.எஸ். வெண்ட்யுரா போன்றே ஐபேட் ஓ.எஸ். 16-இலும் மல்டி டாஸ்கிங் செய்வதற்கான வசதி, லைவ் டெக்ஸ்ட், மேம்பட்ட மெசேஜஸ் ஆப், மெட்டல் 3 என்ஜின் மூலம் உருவாக்கப்பட்ட ஏராளமான கேம்கள் வழங்கப்படுகிறது. ஐபேட் ஓ.எஸ். 16-இல் உள்ள ஸ்டேஜ் மேனேஜர் மூலம் பல்வேறு செயலிகளை ஐபேடில் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பயன்படுத்த முடியும். 

click me!