இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு 2t வெளியீட்டு தேதி - விலை எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jun 30, 2022, 9:43 PM IST

இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. 


ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2t ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இறுக்கிறது. ஏற்கனவே  இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் இந்திய வெளியீடு ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்தது. முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி தவறுதலாக அறிவிக்கப்பட்டு, பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.

இதையும் படியுங்கள்: சாம்சங் போனிற்கு அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா?

Tap to resize

Latest Videos

ஒன்பிளஸ் நிறுவனம் இதே தவறை மீண்டும் செய்து இருப்பதாக தெரிகிறது. எனினும், உடனடியாக அது நீக்கப்பட்டு விரைவில் வெளியீடு என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இம்முறை வெளியான அப்டேட் படி ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 1 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும்  என குறிப்பிடப்பட்டது. தற்போது இந்த தேதி மாற்றப்பட்டு, விரைவில் வெளியீடு என்றே காண்பிக்கிறது.

இதையும் படியுங்கள்: அசத்தல் அம்சங்கள், ஸ்டைலிஷ் டிசைன்.. மிட் ரேன்ஜ் பிரிவில் புது நோக்கியா போன் அறிமுகம்..!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போனின் அம்சங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்த மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர், 80 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங், மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 2t ஸ்மார்ட்போன் 8GB ரேம், 128GB மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இனி அந்த கவலை வேண்டாம்... விரைவில் வாட்ஸ்அப் வரும் புது அம்சம்...!

விலையை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 2t பேஸ் வேரியண்ட் அதாவது 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை கரூ. 28 ஆயிரத்து 999 என துவங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் ஒன்பிளஸ் நார்டு 2t மாடல் ஷேடோ கிரே மற்றும் ஜேட் ஃபாக் நிறங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 4 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. 

ஒன்பிளஸ் நார்டு 2t எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED பேனல், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர்
- 8GB , 12GB ரேம்
- 128GB, 256GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1 
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
-2MP டெப்த் அல்லது மோனோ கேமரா
- 32MP செல்பி கேமரா
- 4500mAh பேட்டரி
- 80 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங் 

click me!