ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நல்ல காலம் வந்து விட்டது. இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை 5 ஆயிரம் ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான போது அடிப்படையாக 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ 66,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அதே சமயம் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ 71,999 என்று நிர்ணியக்கப்பட்டது. இந்த இரண்டு மாடல்களுக்கும் தற்போது ரூ.5,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, 8 ஜிபி + 128 ஜிபி கொண்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.61,999 என்றும், 12 ஜிபி + 256 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.66,999 என்றும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இதனை அமேசான் தளத்திலும் மற்றும் https://www.oneplus.in/10-pro என்ற ஒன்பிளஸ் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக, OnePlus பட்ஸ் Z2 விலை ரூ. 2,299, பட்ஸ் ப்ரோ விலை ரூ. 5,499 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
OnePlus 10 Pro ஆனது LTPO 2.0 தொழில்நுட்பத்துடன் கூடிய 6.78-இன்ச் QHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 120Hz ரெவ்ரெஷ் ரேட்டும், பிரீமியம் தோற்றத்தில் வளைந்த திரை வடிவமைப்பும் உள்ளன. மேலும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 பிராசசர், 80W வயர்டு சார்ஜர், 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி ஆகியவை உள்ளன. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்கு ஏற்றவாறு 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது.
ரூ.50 ஆயிரத்திற்குள் iPhone 13 வாங்கலாம்.. எப்படி? இப்படி..
கேமராவைப் பொறுத்தவரையில்,முன்புறத்தில் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 50 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் கேமரா, 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தில் Sony IMX 615 சென்சாருடன் கூடிய, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இதன் மூலம் 1080P வரையில் வீடியோ எடுக்கலாம்.
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள பேண்டுகள்:
GSM:B2, 3, 5, 8
WCDMA:B1, 2, 4, 5, 8, 19
LTE-FDD:B1, 2, 3, 4, 5, 7, 8, 12, 17, 18, 19, 20, 26, 28A
LTE-TDD:B34, 38, 39, 40, 41
5G NSA:n1, n3, n5, n8, n40, n41, n78, n79
5G SA:n1, n3, n5, n8, n28A, n40, n41, n78, n79
MIMO:B1, B3, B38, B39, B40, B41, n1, n3, n40, n41, n78, n79