Tata Croma-ன் குறைந்த விலை Apple Mac Book.. ஆன்லைன் ஷாப்பிங்கில் அட்டகாசமான ஆஃபர்கள்!

By Dinesh TGFirst Published Nov 19, 2022, 11:13 PM IST
Highlights

டாட்டா நிறுவனத்தின் க்ரோமா ஆன்லைன் ஷாப்பிங்கில் Black Friday sale என்ற பெயரில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக ஆப்பிள் மேக்புக் லேப்டாப்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆஃபர்களை இங்குக் காணலாம். 

அமேசான், பிளிப்கார்ட்டைப் போல் டாட்டா நிறுவனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட க்ரோமா என்ற ஆன்லைன் ஷாப்பிங் தளம் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பிளாக் ப்ரை டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும். அந்த வகையில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி இந்தாண்டிற்கான Croma Black Friday sale 2022 தொடங்கியுள்ளது. வரும் 27 ஆம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறும்.

ஆப்பிள் மேக்புக் ஏர் 2020 (Apple MacBook Air 2020)

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 2020 ஆனது ரூ. 79,990 மதிப்பில் பெற முடியும். இதில், 
 13.3-இன்ச் LED டிஸ்ப்ளே, M1 சிப்செட், 8ஜிபி ரேம் , 256ஜிபி SSD ஆகிய அம்சங்கள் உள்ளன. HDFC வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு 10,000 ரூபாய் மதிப்பிலான உடனடி தள்ளுபடியைப் பெறுவார்கள். இதேபோல், EMI பரிவர்த்தனைகளில், 10,000 ரூபாய் மதிப்பிலான உடனடி கேஷ்பேக், 12 மாதங்கள் வரை கட்டணமில்லா EMI உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 2020 (Apple MacBook Pro 2020)

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ 2020 அசல் விலை 1,23,490 ஆகும். ஆனால், தற்போது க்ரோமா ஆஃபரில் ரூ.1,13,490  மதிப்பில் பெற முடியும். இதில், 13.3-இன்ச் LED டிஸ்ப்ளே, M2 சிப்செட், 8ஜிபி ரேம் , 256ஜிபி SSD ஆகிய அம்சங்கள் உள்ளன 

WhatsApp மூலமாக இனி ஷாப்பிங்கும் செய்யலாம்!

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 2022

மேக்புக் ப்ரோ 2022 ஆனது 13.3-இன்ச் LED டிஸ்ப்ளே, புத்தம் புதிய M2 சிப்செட் கிளப் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி ஆகியவை உள்ளது. மேக்புக் ப்ரோ 2022 அசல் விலை ரூ.1,39,390 ஆகும். ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள வங்கி சலுகைகளுடன், நீங்கள் அதை ரூ. 1,29,390 க்கு பெறலாம். 

மற்ற ஆஃபர்கள்

க்ரோமா ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்னும் பல பொருட்கள் ஆஃபரில் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், புளூடூத் ஸ்பீக்கர்கள், TWS இயர்போன்கள், குரோமா தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு தள்ளுபடிகள் உள்ளன. குரோமாவைத் தவிர, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்களும் பிளாக் ஃபிரைடே விற்பனையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!