இங்கயும் விளம்பரமா ? Netflix புதிய சந்தா திட்டம்!

By Dinesh TG  |  First Published Oct 15, 2022, 11:32 PM IST

பிரபல ஸ்ட்ரீமிங் தளமான Netflix-ல் விளம்பரங்களுடன் கூடிய சந்தாவை நவம்பரில் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்ய உள்ளது.


நெட்ப்ளிக்ஸ்  சந்தா அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் சேவை ஆகும். இதில் விளம்பரங்கள் இல்லாமல் டிவி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்கலாம்.
மேலும், இணைய வசதி இல்லாத சமயத்தில் உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஸ் அல்லது விண்டோஸ்  10 சாதனங்களில் டிவி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும்  டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

இதற்கு முன் விளம்பரங்கள்  இல்லாமல் இதன் வாடிக்கையாளர்கள் இதனை பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் தற்போது விளம்பரங்களுடன் கூடிய புதிய சந்தாவை அறிவித்துள்ளது. அதன்படி, பேசிக் பிளான்களுடன் ஒப்பிடுகையில், சுமார் 3 டாலர் குறைவான கட்டணத்தில் விளம்பர சந்தா தொடங்குகிறது. 

Tap to resize

Latest Videos

அதாவது, விளம்பரங்களுடன் கூடிய சந்தாவானது 6.99 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் பிளானை தேர்ந்தெடுப்போர் விளம்பரங்களுடன் கூடிய திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கலாம். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிக்கோ, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற 12 நாடுகளில் இதனை அமல்படுத்த உள்ளது.

Flipkart இல் தரமற்ற பொருட்களை விற்று நூதன மோசடி செய்வதாக பிரபல யூடியூபர்கள் குற்றச்சாட்டு !!

இந்தியாவில் இது எப்போது  நடைமுறைக்கு வரும்  என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள்  வெளியாகவில்லை. ஒவ்வொரு நெட்ப்ளிக்ஸ் விளம்பரமும் 15 முதல் 30 வினாடிகளுக்கு நீடிக்கும். மேலும் இது திரைப்படங்கள் அல்லது வீடியோக்களின் முன்னும் பின்னும் தோன்றும்.  இது பேசிக் வித் ஆட்ஸ் (Basic with ads) என்ற சந்தாவின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moto பயனர்களுக்கு நற்செய்தி! Moto 5G ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவை அமல்!!

இதன் வீடியோ தரமானது 720p / HD யாக உள்ளது.  இதில் ஒன் ஸ்ட்ரீமிங் டிவைஸ் சப்போர்ட் உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 4 முதல் 5 நிமிடங்கள் வரையில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தில், டவுன்லோட் செய்ய இயலாது. 
 

click me!