5ஜி உரிமம் பெற்ற அதானி.. ஜியோ அல்லது ஏர்டெலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

By Dinesh TG  |  First Published Oct 15, 2022, 11:24 PM IST

5ஜி ஏலத்தில் பங்குபெற்ற அதானி நிறுவனம், தற்போது தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமத்தை பெற்றுள்ளது. இதனால் ஜியோ ஏர்டெலுக்குப் போட்டியாக அதானி நிறுவனம் வருமா என்பது குறித்து இங்கு காணலாம். 


இந்த 2022 ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் யாருமே எதிர்பாத வகையில் அதானி குழுமம் பங்கேற்றது. இதனால் ஜியோவைப் போல் அதானி நிறுவனமும் டெலிகாம் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், ஏலத்தில் குறைந்த அளவிலான 5ஜி அலைக்கற்றைகளை மட்டுமே அதானி நிறுவனம் வாங்கியது. மேலும், இது பொதுபயன்பாட்டுக்கு கிடையாது என்றும், தொழிற்சாலைகளுக்கு 5ஜி சேவையை வழங்கும் நோக்கத்தில் தான் ஏலத்தில் பங்கேற்றதாகவும் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் விளக்கமளித்தது. 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தற்போது அதானி நிறுவனம் தொலைத்தொடர்புக்கான உரிமத்தை (Unified License) பெற்றுள்ளது. அதானி குழுமம் ஏற்கனவே பல விமான நிலையங்கள், தரவு மையங்கள் மற்றும் பலவற்றை அதன் சேவைகளுக்கு கீழ் கொண்டுள்ளது. 

Samsung 5G Software Update: அடுத்த மாதத்திற்குள் எல்லா 5G ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி கிடைக்கும்

சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஏலங்களில் வாங்கப்பட்ட 5G அலைக்கற்றைகள், அதானியின் சொந்த நிறுவனங்களின் பயன்பாட்டுக்காகவும், பிற நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப அதே 5ஜி சேவைகளை வழங்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தொலைத்தொடர்பு துறையில் ஜாம்பவானாக ஜியோவும், அதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் உள்ளது. எனவே, அதானி குழுமம் 5ஜி சேவையை தொழில்துறை அளவில் மட்டுமே வைத்துக்கொள்வது தான் உகந்ததாக இருக்கும். மேலும், 5ஜி என்பது தற்போதைக்கு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எல்லாம் கிடையாது. 

Airtel, Jio, VI எந்த நெட்வொர்க்கில் 5ஜி வேகம் அதிகம்? நம்பர் 1 இடத்தில்…

இந்தியாவில் 5ஜி முழுப்பயன்பாட்டில் வருவதற்கு குறைந்தது ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையில் ஆகலாம். 5ஜியில் மிகப்பெரிய முதலீடு செய்வதால், அதற்குரிய பலன் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். எனவே, பொருளாதார நிதிநிலையை கருத்தில் கொண்டு, பொதுபயன்பாட்டு சேவைக்கு வருவதை அதானி தவிர்ப்பது நலம்.  

அதானி குழுமத்தின் மூலம் தொழில்துறையில் 5ஜி வந்தாலும் சரி, வணிக ரீதியல் 5ஜி வந்தாலும், அதன் மூலம் நேரடியான போட்டிகள் இருக்காது என்றே டெலிகாம் இணையதளங்கள் கூறுகின்றன.
 

click me!