தரமான விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன் வேண்டுமா? கொஞ்சம் பொறுத்திருங்கள்!

By Asianet TamilFirst Published Mar 4, 2023, 11:48 AM IST
Highlights

இந்தியாவில் வரும் மார்ச் 10 ஆம் தேதி Moto G73 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மோட்டோ ஸ்மார்ட்போன் பிரியர்கள் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை இங்குக் காணலாம்.

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் Moto G73 5G எனப்படும் புதிய ஸ்மார்ட்போனை மார்ச் 10 அன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக சில உலகளாவிய சந்தைகளுக்கு Moto G73 5G போனை இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தியது, பின்னர் இந்தியாவிலும் அதே அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. 

புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 930 பிராசசர், பின்புறத்தில் டூயல் கேமராக்களுடன் வரும். மற்ற மோட்டோரோலா 5ஜி ஸ்மார்ட்போன்களைப் போலவே, வரவிருக்கும் மோட்டோ ஜி73 போனிலும் கிட்டத்தட்ட 13 5ஜி பேண்ட் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் G73 அறிமுகத்தை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

சில தளங்களில் Moto G73 5G போனின் படமும் வெளியாகியுள்ளது. அதை வைத்து பார்க்கும் போது வரவிருக்கும் ஸ்மார்ட்போன் அப்படியே உலகளாவிய மாடலைப் போலவே உள்ளது.  நீல வண்ணம் கொஞ்சம் சிறப்பித்துக் காட்டுகிறது, ஆனால் வாடிக்கையாளர்கள் அதை விட அதிக வண்ணங்கள் கொண்ட மாடல் ஸ்மார்ட்போன்களை  பெறலாம். 

முன்பக்கத்தில் பஞ்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. பின்புறம் ஒரு செவ்வக வடிவத்தில் கேமரா அமைப்பு உள்ளது. அது ஸ்மார்ட்போனின் நிறத்திலேயே அமைகிறது.  கேமரா பகுதியில் பிரைமரி கேமரா,  அல்ட்ரா-வைட் கேமராக்களுக்கு என தனியாக  இரண்டு பெரிய கட்அவுட்கள் உள்ளன.

போன் குறித்து வந்த எதிர்பார்ப்புகள் துல்லியமாக இருந்தால், Moto G73 ஆனது 6.5-இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளே, 50-மெகா பிக்சல் பிரைமரி சென்சார், 8-மெகா பிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா,  செல்ஃபிக்களுக்கான 16-மெகாபிக்சல் முன் கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம். 

33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, அதற்கு ஏற்ப 5,000mAh பேட்டரி இருக்கலாம். மிகமுக்கியமாக  Moto G73 போனில் Dolby Atmos ஒலியுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  சார்ஜ் செய்வதற்கான USB Type-C 2.0 போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கலாம். போனின் பேனல் பிளாஸ்டிக்காக இருக்கலாம் ஆனால் நீரிலிருந்து பாதுகாக்கும் வகையிலான வடிவமைப்புடன் இருக்கலாம்.

இந்தியாவில் Moto G73 5G ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.20,000 ஆக இருக்கலாம். இந்த போன் உலகளாவிய சந்தைகளில் EUR 299க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மதிப்பில்  இது தோராயமாக ரூ.26,600 ஆகும். Moto G73 5G ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி என்ற ஒரே மாடலில் மட்டுமே அறிமுகமாகலாம். 

மற்ற மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களைப் போலவே, G73 5G போனும்Flipkart, மோட்டோ ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டில் விற்பனைக்கு வரும்.  மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ரூ.18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!