பட்ஜெட் விலையில் விரைவில் ரெட்மி புதிய ஃபயர்ட் டிவி அறிமுகம்!

By Asianet Tamil  |  First Published Mar 3, 2023, 10:39 PM IST

ரெட்மி நிறுவனம் புதிதாக ஃபயர் டிவி என்ற 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 


ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மட்டுமில்லாது, டிவி தயாரிப்பிலும் ஷாவ்மி நிறுவனம் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இதற்கு முன்பு நடந்த ஆஃபர் சேல்களில் ஷாவ்மி, ரெட்மி டிவிகள் தான் அதிகம் விற்பனையாகின. ஷாவ்மி ரெட்மி டிவிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஷாவ்மி நிறுவனம் ஃபயர் டிவி என்ற ஸ்மார்ட் டிவியை தயாரித்துள்ளது.  வரும் மார்ச் 14 ஆம் தேதி இந்தியாவில் Redmi Fire TV அறிமுகம் செய்யப்படுவதை Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது. மற்ற அனைத்து மாடல்களும் ஆண்ட்ராய்டு டிவியில் இயங்குவதால், ஃபயர் ஓஎஸ் கொண்ட நிறுவனத்தின் முதல் டிவி இதுவாகும். இது 32 இன்ச் மாடலாக இருக்கும் என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஸ்மார்ட் ஹப் கண்ட்ரோலைக் கொண்ட ஃபயர் ஓஎஸ் 7 பிரீமியம் அனுபவம் கிடைக்கும் என்று ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய ரிமோட்டில் கூகுள் அசிஸ்டண்ட்டிற்குப் பதிலாக அலெக்ஸாவிற்கான ஷார்ட்கட் உள்ளது,. இதே போல் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக் ஆகியவற்றிற்கான ஷார்ட் கட் பட்டன்களும் ரிமோட்டில் உள்ளன.

டிவியின் விளிம்பு பகுதிகள் சுற்றியுள்ள பெசல்கள் உலோகத்தினால் ஆனதாக தெரிகிறது. பெசல் சிறிதாக இருப்பதால் சிறந்த படக்காட்சி இருக்கும். மேலும், ஆடியோவை பொறுத்தவரையில் வழக்கமான ஆடியோ ஸ்பீக்கர் தான் இருக்கும். நல்ல ஆடியோ வேண்டுமென்றால், கூடுதலாக சவுண்ட் பாக்ஸ் அல்லது தனி ஸ்பீக்கர்கள் வாங்கிதான் வைக்க வேண்டியிருக்கும். 

Vivo V27 Pro, Vivo V27 வந்துவிட்டது.. நம்பி வாங்கலாமா? என்ன சிக்கல்கள் உள்ளன?

மற்றபடி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஏர்பிளே மற்றும் மிராகாஸ்ட் போன்ற பல கனெக்ட் அம்சங்கள் உள்ளன.  இறுதியாக, டிவியானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வரும் என்று கூறப்படுகிறது. கடந்த 2021 ஆண்டு முதன்முதலாக Redmi Smart TV சீரிஸில் இது அறிமுகப்படுத்தப்பட்டது .
ரெட்மி ஃபயர் டிவியானது  அமேசான், mi.com தளங்களில்  விற்பனைக்கு வரும். விலை, சிறப்பம்சங்கள், ஆஃபர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

click me!