சாம்சங் நிறுவனத்தின் புத்தம் புதிய கேலக்ஸி வாட்ச் 5 தளத்தில் இப்போது பெண்களுக்காக பல்வேறு விதமான அம்சங்கள் மெருகேற்றப்பட்டுள்ளன. இது குறித்த முழுமையான விவரங்களை இங்கு காணலாம்
சாம்சங் நிறுவனம் அண்மையில் கேலக்ஸி வாட்ச் 5, வாட்ச் 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்தது. இந்த வாட்ச்க்கான விற்பனையும் துவங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில், பெண்களுக்கான மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு அம்சம் உட்பொதிக்கப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனமும் நேச்சுரல் சைக்கிள்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த நுட்பத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இது சருமத்தின் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டும், இன்னும் பிற தரவுகளின் அடிப்படையிலும் மாதவிடாய் சுழற்சி தேதிகளை முன்கணிப்பு செய்கிறது. இந்த நுட்பம் கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ இரண்டிலும் உள்ளது.
Galaxy Watch5 பயனர்கள் மாதவிடாய் தேதி கணிப்பு அம்சத்தின் மூலம் மேம்பட்ட சுழற்சி கண்காணிப்பை அணுக முடியும், இது சமீபத்தில் கொரியா குடியரசின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைச்சகத்தால் (MFDS) அங்கீகரிக்கப்பட்டது. மாதவிடாய் கண்காணிப்பு அம்சம் அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் (FDA) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேச்சுரல் சைக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி ரவுல் ஷெர்விட்ஸ்ல் விளக்கமளித்துள்ளார். அதன்படி, நேச்சுரல் சைக்கிள் நிறுவனத்தின் செயலியானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களுக்கு அவர்களின் கருவுறுதலைக் கட்டுப்படுத்த உதவியது, மேலும் சாம்சங் நிறுவனத்துடனான இந்த கூட்டாண்மயானது, கருவுறுதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் முறையாக ஸ்மார்ட்வாட்ச் மூலம் வெப்பநிலை அடிப்படையிலான சுழற்சி கண்காணிப்பை வழங்க உதவுகிறது.
இப்படி செய்தால் போதும்.. உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம்!
வெப்பநிலை சென்சார், அவற்றின் சுற்றுப்புறங்களில் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டாலும் அல்லது தூங்கும் போது நகர்ந்தாலும், மிகவும் துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ள அகச்சிவப்பு தொழில்நுட்பத்தை இந்த வாட்ச் பயன்படுத்துகிறது. அனைத்து தரவும் குறியாக்கம் செய்யப்பட்டு, பயனரின் சாதனத்திலேயே சேமிக்கப்படும், இது பயனர்களுக்கு சிறந்த மன அமைதியையும் வழங்குகிறது.