பல ஆண்டுகளுக்கு பிறகு சோனி தரப்பில் வாக்மென் ஆடியோ டிவைஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுன் விலை கிட்டத்தட்ட ஐபோன் 13 வாங்கிவிடலாம் என்ற அளவுக்கு உள்ளது.
உலகில் ரேடியோ தொழில்நுட்பம் வளரும் போது, பாடல்களுக்கு என பிரத்யேக கேசட் ரேடியோ செட் அமைப்பை கொண்டு வந்தது வாக்மென் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் சோனியின் வாக்மெனுக்கு பெரும் வரவேற்பு பெற்றது. துல்லியமான ஆடியோ, தரமான சாதனம், கைக்கு அடக்கமான தொழில்நுட்பம் என்று இருந்ததால் மக்கள் மத்தியில் ஏகபோகத்திற்கு வரவேற்பு இருந்தது.
அதன்பிறகு, ஸ்மார்ட்போன் வந்ததால், சோனியின் வாக்மென், ஐபேட் போன்ற சாதனங்கள் மறையத் தொடங்கின. அனைவரும் செல்போனிலேயே தங்களுக்கு பிடித்த பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், தற்போது சோனி நிறுவனம் இந்தியாவில் மீண்டும் வாக்மென் சாதனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் சோனி வாக்மேன் NW-ZX707 ஆகும். இந்த சாதனம் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியோஃபில்ஸ் மற்றும் ஹை-ஃபை ஆடியோவை கேட்கும் பிரியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சோனி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாக்மேன் NW-ZX707 ஆனது 5-இன்ச் டிஸ்ப்ளே, ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் பிராசசிங், 25 மணிநேரத்திற்கு மேலாக இயங்கும் பேட்டரி சக்தி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
90களில் பிறந்தவர்களுக்கு வாக்மேன் என்பது சிறுவயது நினைவுகளைத் திரும்பக் கொண்டுவரும் ஒரு அளப்பரிய சாதனம் ஆகும். இது ஒரு போர்ட்டபிள் ஆடியோ பிளேயர் ஆகும். இந்தியாவில் MP3 பிளேயர்கள் அல்லது ஆப்பிள் ஐபாட் வருவதற்கு முன்பே பயனர்கள் பெரிதும் விரும்பியது வாக்மென் தான். பயணத்தின் போது கேசட்டுகளை போட்டுக் கொண்டு பாடல்களை கேட்பது தனி சுகம். Walkman NW-ZX707 மூலம் சோனி நவீன காலத் தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்தாலும் பாரம்பரிய வாக்மேனின் சாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.
WhatsApp Update: நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த அப்டேட் வந்துவிட்டது!
இந்தியாவில் சோனி வாக்மேன் NW-ZX707 விலை:
இந்தியாவில் சோனி வாக்மேன் NW-ZX707 ஆனது ரூ.69,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 30 முதல் ஹெட்ஃபோன் சோனில் வாங்கலாம். கிளாசிக் கருப்பு மற்றும் தங்க நிறம் என இரண்டு வகையான கலர்களில் வருகிறது. இசைப் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் விலையும் அதிகமாகவே உள்ளது. வங்கிச் சலுகைகளை பயன்படுத்தி வாக்மென் வாங்கினால் கூட, ஐபோன் 13 அல்லது ஐபோன் 14 விடவும் இந்தச் சாதனத்தின் விலை அதிகமாகத் தான் உள்ளது.