Amazon Holi Sale 2023: நீண்ட நாட்களுக்குப் பிறகு அமேசானில் ஆஃபர் மழை!

By Asianet Tamil  |  First Published Mar 2, 2023, 11:58 PM IST

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அமேசானில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஆஃபர் விவரங்களை இங்குக் காணலாம். 


அமேசானில் ஹோலி பண்டிகைக்காக ஆஃபர் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஃபாஸில், பெவ்சில்லாவுடன் இணைந்து ஆஃபர்களை வழங்குகிறது.  லேப்டாப்கள், அணிகலன் பொருட்கள் மற்றும் அமேசானின் சொந்த தயாரிப்புகள், சாதனங்கள் ஆஃபர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  
​​

பெவ்சில்லா, க்ராக்ஸ், ஃபெரெரோ ரோச்சர், ஃபோசில் மற்றும் பிற சிறந்த பிராண்டுகளின் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ஷாப்பிங் செயலியில் (ஆண்ட்ராய்டு மட்டும்) அலெக்சாவைப் பயன்படுத்தி ஹோலி ஸ்டோரில் செல்லலாம். இதற்கு செயிலியில் உள்ள மைக்ரோஃபோன் ஐகானைத் தட்டி, “ அலெக்சா, ஹோலி ஷாப்பிங் ஸ்டோருக்குச் செல்”  என்று சொன்னாலே போதும். ஹோலி ஆஃபர்கள் இருக்கும் பக்கம் காட்டப்படும்.

Tap to resize

Latest Videos

அமேசான் ஹோலி விற்பனை 2023: நல்ல ஆஃபரில் கிடைக்கும் பொருட்கள்

OnePlus Nord CE 2 Lite 5G 18,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி M13 ஸ்மார்ட்போனை வெறும் 10,999 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் போட் வேவ் எட்ஜ் ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கலாம். அதன் விலை 2,199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
BoAt Rockerz 255 Pro+ புளூடூத் நெக்பேண்ட், BoAt Rockerz 103 Pro புளூடூத் நெக்பேண்ட் ஆகியவற்றின் விலையும் குறைவாக உள்ளது. 500 ரூபாய்க்குள் ப்ளூடூத் நெக் பேண்ட் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அமேசானின் சொந்த தயாரிப்பு நெக் பேண்டை வாங்கலாம். அதன் விலை வெறும் 489 ரூபாய் ஆகும்.

Paytm மூலம் இனி இப்படி கூட செய்யலாம்.. வந்துவிட்டது புதிய அம்சம்!

ASUS Vivobook Pro 16 லேப்டாப் 89,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் 11வது ஜெனரல் இன்டெல் கோர் i9+ RTX 3050 கிராபிக்ஸ் அம்சங்கள் உள்ளன.  அமேசான் எக்கோ டாட் (3வது ஜெனரல்) 3,499 ரூபாய்க்கும், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் லைட் 3,299 ரூபாய்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பலவிதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களும் ஆஃபர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு அமேசான் தளத்தை பார்வையிடவும்.

click me!