வோடஃபோன் ஐடியாவில் புதிதாக ரூ.296 பிளான் அறிமுகம்! ஆனால்..

By Asianet Tamil  |  First Published Mar 2, 2023, 11:56 PM IST

வோடஃபோன் ஐடியாவில் புதிதாக ரூ.296 ப்ரீபெய்ட் பிளான் அறிமுகமாகியுள்ளது. இதில் என்னென்ன பலன்கள், ஆஃபர்கள், பாதகங்கள் உள்ளன என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
 


Vodafone Idea நெட்வொர்க்கில் புதிதாக ரூ.296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் வந்துள்ளது. இதில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் பிற பலன்கள் வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொ்க்கிலும் இதேபோல் பிளான் உள்ளன.

Vi ரூ.296 ப்ரீபெய்ட் அறிமுகம்:

Tap to resize

Latest Videos

Vodafone Idea வழங்கும் புதிய ரூ.296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் மூலம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஒரு நாளைக்கு 100 SMS மேற்கொள்ளலாம். 25GB மொத்த டேட்டாவைப் பெறுகிறார்கள், மேலும் தினசரி டேட்டா வரம்பு என்று எதுவும் இல்லை. அதாவது ஒரு டிவி நிகழ்ச்சி அல்லது ஏதேனும் வீடியோ பார்க்கும்போது மக்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் அந்த மாதம் முடிவதற்குள் நிறைய டேட்டாவை செலவு செய்ய நேரிடும். . ஆனால், உங்கள் வீட்டில் Wi-Fi இருந்தால் இது ஒரு பிரச்சனையாக இருக்காது.

பேக்கில் வழங்கப்பட்ட மொபைல் டேட்டாவை தீர்ந்தவுடன், ஒரு எம்பிக்கு 50 பைசா என்ற விதத்தில் வசூலிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும், மேலும் நீங்கள் அனைத்து பலன்களையும் பயன்படுத்தினால் எஸ்எம்எஸ் கட்டணமும் இருக்கும். ப்ரீபெய்ட் திட்டம் நீங்கள் வாங்கியவுடன் 30 நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கும். பேக்கில் OTT சந்தா எதுவும் இல்லை. சுருக்கமாக சொல்லப்போனால், வாய்ஸ்கால், ஓரளவு டேட்டாவை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த பிளான் ஏற்றது.

ஏர்டெல் மற்றும் ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் பேக்:

ஏர்டெல் மற்றும் ஜியோவும் இதேபோன்ற ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளன. எனவே, அந்த நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் 25 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ஆனால், அதிக டேட்டா தேவைப்படுபவர்கள், 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவர்கள், இந்த ரீசார்ஜ் பிளானை வாங்க வேண்டாம்.

USB டைப் ‘சி’ உடன் களமிறங்கும் ஐபோன் 15.. ஆனால் ஒரு சிக்கல்!

5G டேட்டாவை பொறுத்தவரையில் சட்டென்று தீர்ந்துவிடும். எனவே, இந்த பிளான் வாங்கினாலும், டேட்டா ஆட்-ஆன் பேக் வாங்க வேண்டிய சூழல் வரும்.  ஜியோவில் ரூ.61 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் பேக் உள்ளது. இது 6ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. அதன் வேலிடிட்டி உங்கள் தற்போதைய பிளானின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடேட் வாய்ஸ்கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன.
 

click me!