உலகில் பல்வேறு இடங்களில் டிவிட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உலகில் பல்வேறு இடங்களில் டிவிட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன்பின் அவர் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறார். டிவிட்டரில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில் 5 ஆயிரத்து 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டுவிட்டர் பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இதனால் தற்போது டிவிட்டரில் ஆயிரத்து 800 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளால் டிவிட்டர் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே உலகில் பல்வேறு பகுதிகளில் டிவிட்டர் சேவை முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிட்டர் சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 30GB டேட்டா சும்மாவா? விரைவில் ஏர்டெல் கட்டணங்கள் உயரும்: சுனில் மிட்டல் திட்டவட்டம்
டிவிட்டர் செயலி மற்றும் இணையதள பக்கத்திலும் டிவிட்டர் சேவையை பயன்படுத்த முடியவில்லை என்றும் தங்களது போஸ்ட்கள் காட்டவில்லை என்று கூறுகின்றனர். மேலும் சிலர் ஹோம் பக்கத்தில் வெகு நேரமாக Try Again என்று காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். டிவிட்டர் சேவையின் இந்த பாதிப்பால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.