புதிய மோட்டோ e32s இந்திய வெளியீட்டு அறிவிப்புடன் இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 299 இல் இருந்து துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ e32s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜூன் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் இந்திய வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ e32s இந்திய வெளியீட்டு அறிவிப்புடன் இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 299 இல் இருந்து துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் மோட்டோ e32s ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோமார்ட் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், அதிகபட்சம் 4GB ரேம், 16MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
மோட்டோ e32s அம்சங்கள்:
- 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
- IMG PowerVR GE 8320 GPU
- 3GB ரேம், 32GB மெமரி
- 4GB ரேம், 64GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் My UX
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 16MP பிரைமரி கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 8MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 15W பாஸ்ட் சார்ஜிங்
- 3.5mm ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
புதிய மோட்டோரோலா மோட்டோ e32s ஸ்மார்ட்போன் ஸ்லேட் கிரே மற்றும் மிஸ்டி சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.