12 நிமிடங்களில் 50% சார்ஜ்... அசத்தல் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 31, 2022, 04:24 PM IST
12 நிமிடங்களில் 50% சார்ஜ்... அசத்தல் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

சுருக்கம்

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டு இருக்கும் ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா உள்ளது.

ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில்  தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஐகூ நியோ சீரிசில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. ஐகூ நியோ 6 என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனில் 6.62 இன்ச் FHD+ 120Hz, E4 AMOED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அட்ரினோ 650 GPU, லிக்விட் கூலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டு இருக்கும் ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP B&W போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4700mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ஐகூ நியோ 6 அம்சங்கள்:

- 6.62 இன்ச் FHD+ AMOLED பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8GB / 12GB LPDDR5 ரேம்
- 128GB / 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். மற்றும் பன்டச் ஓ.எஸ். 12 யு.ஐ.
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 64MP பிரைமரி கேமரா, OIS வசதி
- 12MP அல்ட்ரா வைடு லென்ஸ்
- 2MP போர்டிரெயிட் கேமரா
- 16MP செல்பி கேமரா 
- 4700mAh பேட்டரி 
- 80W பாஸ்ட் சார்ஜிங் 
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி

புதிய ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போன் டார்க் நோவா மற்றும் சைபர் ரேன்ஜ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும், 12GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

WhatsApp Update: அப்பாடா, இனி யாருக்கும் தெரியாது.! நிம்மதி பெருமூச்சு விடும் பயனாளர்கள்.!
டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..