மைக்ரோசாப்ட் கோ பைலட் (Copilot) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிக்க அம்சங்களை கொண்டு வந்துள்ளது. இது ChatGPT போன்ற AI அம்சங்களை வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் என முக்கிய பணிகளுக்கு உதவும்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் தனது டாக்ஸ், ஷீட்ஸ் போன்ற மென்பொருட்களில் AI உட்புகுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில், கூகுளுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வந்துள்ளது. ஆனால், கூகுளை மிஞ்சும் அளவுக்கான சாட் ஜிபிடி, கோ பைலட் தளத்தை ஒருங்கிணைத்து அறிமுகம் செய்துள்ளது.
எக்செல், அவுட்லுக், டீம்ஸ் போன்ற மென்பொருட்களில். ChatGPT பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இந்த மென்பொருட்களிலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் மிகவும் திறமையாகவும் திறம்படவும் செயல்பட முடியும், இதில் காலெண்டர்கள், மின்னஞ்சல்கள், அரட்டைகள், ஆவணங்கள், சந்திப்புகள் போன்ற பல அம்சங்களும் அடங்கும்.
புதிய அறிமுகத்தைப் பற்றி மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஒரு வலைப்பதிவில் கூறினார் அதில் அவர்,, “கம்ப்யூட்டிங்கில் நாம் எந்தளவுக்கு தொடர்பில் கொள்கிறோம் என்ற முன்னேற்றத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பரிணாம வளர்ச்சி தான் இது. எங்கள் புதிய கோ பைலட் கருவி மூலம், எளிமையான முறையில் சிறந்த்தொரு தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குகிறோம் - நேச்சுரல் லேங்குவேஜ் மூலம் தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக உதவுகிறோம்." இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, புதிய AI ஒருங்கிணைப்பு மூலம், Word, PowerPoint போன்ற பயன்பாடுகள் இனி பயனர்களுக்கு மிகவும் லாபகரமானதாக மாற்றும்.
பவர் பாயிண்ட் வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் சிந்தனைகளை மட்டும் சிதற விட்டால் போதும், கோ பைலட் செயற்கை நுண்ணறிவு தானாகவே செயல்பட்டு, சட்டென்று உங்களுக்குத் தேவையான பவர் பாயிண்டை தயார் செய்து கொடுக்கும். வழக்கமாக Outlook மின்னஞ்சலில் தளத்தில் இன்பாக்ஸை அழிப்பதற்கு மணிக்கணக்கில் கூட ஆகலாம். ஆனால், இனி , Copilot மூலம் வெறும் ஒரு சில நிமிடங்களில் தேவையில்லாத பெருமளவு மின்னஞ்சல்களை நொடிப்பொழுதில் அழிக்கலாம்.
ChatGPT 4 இலவசமாக வேண்டுமா? ரொம்ப ஈஸி தான்!
இதே போல் மைக்ரோசாப்ட் தளத்தில் செயல்படும் டீம்ஸ் ‘Teams’ மென்பொருளிலும் கோ பைலட் நன்கு வேலை செய்கிறது. ஏதாவது அலுவலக மீட்டிங் நடந்தால் கூட, அதுவாகவே என்னென்ன முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன என்பதை தானாகவே நோட்ஸ் எடுக்கிறது.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பொறுத்த வரையில், நிறுவனத்தில் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்குக் கடமைப்பட்டிருப்பதாக மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு உறுதியளித்துள்ளது. மைக்ரோசாப்ட் 365 கோபிலட்டின் வெளியீடு, ஜிமெயில், டாக்ஸ் மற்றும் பிற பணியிட பயன்பாடுகளுக்கு AI அம்சங்களைக் கொண்டுவருவதாக கூகிள் அறிவித்த சில நாட்களில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.