இந்தியாவில் பிக்சல் ஃபோல்ட், பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் அதிலுள்ள சில அம்சங்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் ஐபோனுக்குப் போட்டியாக மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட்போன் கூகுள் பிக்சல் ஆகும். இதுவரையில் வெளிவந்த எல்லா பிக்சல் போன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் குறிப்பிட்ட சில மாடல்கள் மட்டும் வெளிவரவில்லை.
இந்த நிலையில், தற்போது பிக்சல் 7ஏ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் ஃபோல்ட் வெளிவரும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 9to5Google தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த இரண்டு புதிய கூகுள் ஸ்மார்ட்போன்களும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படலாம், இருப்பினும் சரியான தேதி விவரங்கள் தெரியவில்லை. அதே நேரத்தில் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸின் புதிய நீல மாடலும் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனைத்து புதிய ஸ்மார்ட்போனும், சாதனங்களும் மே 10 அன்று வரவிருக்கும் Google I/O நிகழ்வில் முதலில் அறிவிக்கப்படும்.
பிக்சல் ஃபோல்ட் ஒற்றை 256ஜிபி மெமரி மாடலில் வரக்கூடும். இருப்பினும் இதற்கு முன்பு வந்த தகவலின்படி, 512ஜிபி சேமிப்பக மாடலலும் இருக்கலாம் என்று தெரிகிறது. கார்பன் (கருப்பு அல்லது அடர் சாம்பல்) மற்றும் பீங்கான் (வெள்ளை) ஆகிய இரண்டு வண்ணங்களில் ஃபோல்ட் போன் வரலாம். "ஹேஸ் மிட்டோன்", "போர்சலைன்" மற்றும் "ஸ்கை" நிறங்களில் பிரத்யேகமாக பின்புற கேஸ் மட்டும் கிடைக்கும்.
Pixel 7a போன் ஆனது, ஜென் பிக்சல் 6a போலவே 128GB மெமரி மாடலாக வரலாம். இதுவும் "கார்பன்", "பருத்தி" மற்றும் "ஆர்க்டிக் ப்ளூ" வண்ணங்களில் வரலாம். வரவிருக்கும் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸ் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. Pixel 7a ஆனது தற்போதுள்ள Pixel 7 போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Poco X5 5G இந்தியாவில் அறிமுகம்! நம்பி வாங்கலாமா?
undefined
அதாவது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்த போன் வரலாம். டிஸ்ப்ளே முழு-HD+, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டிருக்கலாம். இதற்கு முன்பு. பழைய பிக்சல் ஏ-சீரிஸ் ஃபோன்களில் பெரிய அளவில் ரெப்ரெஷ் ரேட் இல்லாததால், தற்போது வரவிருக்கும் போனில் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேமராவைப் பொறுத்தவரையில் Pixel 7a ஸ்மார்ட்போனில் 64-மெகாபிக்சல் சோனி IMX787 சென்சார், 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா இருக்கலாம். ப்ரோ மாடல்களில் மூன்றாவது சென்சாரும் இருக்கலாம். முன்பக்க கேமரா விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை, ஆனால் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவில் உள்ளதைப் போல இந்த பிக்சல் 7a போனிலும் 10.8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும்.