ஷாவ்மி ஸ்மார்ட் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக பணியாற்றிய மனு குமார் ஜெயின் வெளியேறினார்!

By Dinesh TGFirst Published Jan 31, 2023, 1:10 PM IST
Highlights

சியோமி இந்தியா நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநரும், சியோமியின் உலகளாவிய துணைத் தலைவருமான மனு குமார் ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பிரிவில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஷாவ்மி ஆகும். எம்ஐ, ரெட்மி என இரண்டு ஸ்மார்ட்போன்களும் இன்று வரையில் உச்சத்தில் உள்ளன. இவ்வளவு பெரிய ஆன்லைன் ஷாப்பிங் மூலம் கடைகோடி வரைக்கும் ஸ்மார்ட்போன்களை கொண்டு சேர்த்த பெருமை ஷாவ்மிக்கு உண்டு. இதற்கு முழுமுதற் காரணமாக திகழ்ந்தவர் மனு குமார் ஜெயின் ஆவார்.

ஷாவ்மியின் சிஇஓ ஆக மனு குமார் ஜெயின் பொறுப்பேற்ற பிறகு ஷாவ்மியின் வர்த்தகம் பன்மடங்கு உயர்ந்தது. பிறகு நிர்வாக இயக்குநராகவும், ஷாவ்மியின் உலககளாவிய பிரிவுக்கு துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று மனு குமார் ஜெயின் திடீரென ஷாவ்மியில் இருந்து விடைபெறுவதாக  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனு குமார் ஜெயின் தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "மாற்றம் மட்டுமே வாழ்க்கையில் மாறாதது! கடந்த 9 ஆண்டுகளாக ஷாவ்மியில் பணியாற்றி விட்டேன். தற்போது விடைபெறுகிறேன். இந்த தருணத்தை மிகவும் கடினமாக்கும் அளவுக்கு அன்பைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. அனைவருக்கும் நன்றி. இது ஒரு பயணத்தின் முடிவும் கூட.  மேலும், அற்புதமான வாய்ப்புகள் நிறைந்த ஒன்றின் புதிய ஆரம்பத்தை குறிக்கிறது என்றும் சொல்லலாம். நன்றி! மனுஜெயின்". இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Jio Vs Airtel: இரண்டிலும் ஒரே விலை பிளான். ஆனால், எது பெஸ்ட் தெரியமா?

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையின் அடிப்படையில் ஷாவ்மி நிறுவனத்தை வெற்றி பெற்ற நிறுவனமாக,  முன்னனி பிராண்டாக மாற்றிய பெருமை மனு குமார் ஜெயினுக்கு சேரும்.  இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கைக்கான நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையைப் பொறுத்தவரை, Xiaomi தற்போது சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டாக உள்ளது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து பேசியிருந்தார். மேலும், அந்த சந்திப்பில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். எனவே, ஷாவ்மியில் இருந்து விலகி ரிலையன்ஸ் நிறுவனத்தில் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!