WhatsApp Update: நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த அப்டேட் வந்துவிட்டது!

By Dinesh TGFirst Published Jan 31, 2023, 11:50 AM IST
Highlights

வாட்ஸ்அப்பில் ஒரே கிளிக்கில் வீடியோ ரெக்கார்டு செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக ஸ்மார்ட்போனில் வீடியோ ரெக்கார்டு செய்யும் போது, சிவப்பு ஐகானை கிளிக் செய்தால் போதும் வீடியோ எடுக்கத் தொடங்கிவிடும், ரெக்கார்டிங்கை எடுத்து முடித்தபிறகு மீண்டும் அதே ஐகானை கிளிக் செய்தால் போதும். ஆனால், வாட்ஸ்அப்பில் செயலியில் இருந்துகொண்டு வீடியோ எடுக்க வேண்டுமென்றால், சிவப்பு ஐகானை, அழுத்தி பிடித்து கொண்டே இருக்க வேண்டும். எப்போது வீடியோவை முடிக்க வேண்டுமோ, அவ்வளவு நேரம் அழுத்தி பிடித்தவாறே இருந்தால் தான் வீடியோ பதிவாகும். இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் பல காலமாக வீடியோ எடுப்பதற்கு சிரமமப்பட்டு வந்தனர். 

இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வாட்ஸ்அப்பில் ஒரே கிளிக்கில் வீடியோ எடுக்கும் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.  வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செயலி பயனர்களுக்காக இந்த புதிய கேமரா மோட் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கேமரா அம்சத்தில்,, பயனர்கள் வாட்ஸ்அப்பில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

இதுதொடர்பாக WaBetaInfo தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த புதிய வீடியோ பயன்முறை அம்சமானது ஆண்ட்ராய்டு 2.23.2.73 அப்டேட்டில் கிடைக்கிறது. இது ஏற்கனவே Google Play Store இல் கிடைக்கிறது. இந்த வசதியை பெற விரும்பும் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியைப் அப்டேட் செய்து, பயன்படுத்தலாம்.

Android 2.23.3.7 அப்டேட்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டபடி, இன்னும் மேம்பட்ட புதிய எழுத்துக்களில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. கலிஸ்டோகா, கூரியர் பிரைம், டேமியன், எக்ஸோ 2 மற்றும் மார்னிங் ப்ரீஸ் ஆகிய ஃபாண்டுகள் இதில் உள்ளன.   ஐபோன் பயனர்களுக்கு, கம்யூனிட்டி நோட்பிகேஷன் குழுவில் உள்ள மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் திறனை கொண்டு வருவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ஜியோ 5G சேவையை விரிவுபடுத்தும் பணி மும்முரம்! இப்போது 72 நகரங்களில் 5ஜி

 iOS 23.2.0.75 அப்டேட்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டபடி, கம்யூனிட்டி நோட்பிகேஷன் குழுவில் உள்ள மெசேஜ், ரியாக்ஷன் குறித்து பயனர்களுக்குத் தெரிவிக்கும் வகையில், செயலியில் உள்ள உள்ள பேனரில் காட்டப்படும். விரைவில் இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் ஆண்ட்ராய்டு தளத்திலும் கொண்டு வரப்படும். தற்போதைய சூழலில் வாட்ஸ்அப்பை காட்டிலும் டெலகிராம் செயலியில் அதிகப்படியான வசதிகளும், அம்சங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!