கவாசகி பைக் வாங்குவோருக்கு ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி... வெளியான சூப்பர் அப்டேட்!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 26, 2022, 03:17 PM ISTUpdated : Apr 26, 2022, 03:23 PM IST
கவாசகி பைக் வாங்குவோருக்கு ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி... வெளியான சூப்பர் அப்டேட்!

சுருக்கம்

கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

கவாசகி  நிறுவனம் 2022 EICMA நிகழ்வில் புதிய 2022 வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிள் மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இந்த மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளில் புதிய TFT டிஸ்ப்ளே, டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவை தவிர மோட்டார்சைக்கிளின் அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள அன்சென் கவாசகி விற்பனையகம் வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 1.50 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 

இந்த தள்ளுபடி ஏப்ல் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் கவாசகி வெர்சிஸ் 650 மாடலுடன் 2+2 ஆண்டுகள் எக்ஸ்டெண்டட் வாரண்டி சலுகையை தேர்வு செய்யும் போது தான் இந்த தள்ளுபடி வழங்கப்படும். தள்ளுபடியை சேர்க்கும் பட்சத்தில் கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 லட்சத்து 75 ஆயிரமாக குறைந்து விடுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

சிறப்பம்சங்கள்:

கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 பி.ஹெச்.பி. பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

கவாசகி வெர்சிஸ் 650 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், சமீபத்தில் தான் புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிளை விட அதிக சக்தி வாய்ந்தது, அதிவேகமாக செல்லக் கூடியது என்பதோடு விலையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடல் விலை ரூ. 8 லட்சத்து 95 ஆயிரம் ஆகும். 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Spotify Premium Free: 3 மாதங்களுக்கு Spotify Premium இலவசம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Flipkart GOAT Sale: ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ.22,000 தள்ளுபடி! மிஸ் பண்ணாதீங்க!