Twitter: டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிற்கு விற்பனை செய்ய அந்த நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து இதுபற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்து 12 மாதங்களில், பணி நீக்கம் செய்யப்பட்டால் நிர்வாகம் சார்பில் அவருக்கு 42 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என ஆய்வு நிறுவனமான ஈக்விலார் தெரிவித்து இருக்கிறது.
பராக் அகர்வால் சம்பலம், நிறுவனத்தின் பங்கு மதிப்பு உள்ளிட்டவைகளை, எலான் மஸ்கின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் கணக்கில் வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும் என ஈக்விலார் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். ஈக்விலார் வெளியிட்டு இருக்கும் தகவலுக்கு டுவிட்டர் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
சி.இ.ஒ. பொறுப்பு:
டுவிட்டர் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வந்த பராக் அகர்வால் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். 2021 ஆண்டில் இவரின் மொத்த வருவாய் 30.4 மில்லியன் டாலர்கள் ஆகும்.
2013 ஆம் ஆண்டு முதல் பொதுத் துறை நிறுவனமாக இயங்கி வரும் டுவிட்டரை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்குகிறார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிற்கு விற்பனை செய்ய அந்த நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து இதுபற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
பேச்சுவார்த்தை:
முன்னதாக டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வைத்திருந்தார். இதை அடுத்து டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புவதாக தெரிவித்து இருந்தார். இதுபற்றி எலான் மஸ்க் மற்றும் டுவிட்டர் நிர்வாக குழு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அதன்படி டுவிட்டர் நிறுவன பங்கு ஒன்றுக்கு 54.20 டாலர்கள் என்ற அடிப்படையில், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிற்கு விற்பனை செய்ய நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது.