ரூ. 249 துவக்க விலை.... இலவச டாங்கிலுடன் மூன்று புது சலுகைகள்... ஜியோஃபை அதிரடி...!

By Kevin Kaarki  |  First Published May 28, 2022, 4:58 PM IST

பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும்.  இவற்றுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக மூன்று ஜியோஃபை (JioFi) சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 349 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அதிகபட்சம் ஒரு மாத வேலிடிட்டி மற்றும் 50GB வரையிலான அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் இத்துடன் ஜியோஃபை டாங்கில் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படித்தி முடித்தப் பின் திரும்ப வழங்கி விட வேண்டும். மேலும் இவை, வழக்கமான பயனர்களுக்காக வழங்கப்படவில்லை. இவை வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஜியோஃபை போஸ்ட்பெயிட் சலுகைகள் 18 மாதங்களுக்கு லாக்-இன் பிரீயட் முறையில் வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில் பயனர்கள் ஒரு முறை இந்த சலுகையை சேர்வு செய்தால் 18 மாதங்களுக்கு அதில் இருந்து வெளியேற முடியாது. ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பில் போடப்படும். 

ஜியோ வலைதள விவரங்களின் படி புதிய ஜியோஃபை போஸ்ட்பெயிட் சலுகைகள் டேட்டா பலன்களை மட்டுமே வழங்குகின்றன. இதில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மேலும் வியாபாரங்களுடன் பதிவு செய்துள்ள பயனர்கள் மட்டுமே இந்த சலுகைகளை தேர்வு செய்ய முடியும். இத்துடன் முதல் முறை இந்த சலுகைகளை தேர்வு செய்யும் போது ரூ. 200 செலுத்த வேண்டும்.

ஜியோஃபை ரூ. 249 போஸ்டிபெயிட் சலுகை:

இந்த சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 30GB டேட்டா வழங்குகிறது. இதனை பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும்.  இவற்றுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஜியோஃபை ரூ. 299 போஸ்டிபெயிட் சலுகை:

இந்த சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 40GB டேட்டா வழங்குகிறது. இதனை பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும்.  இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் வாய்ஸ் கால் போன்ற பலன்கள் இடம்பெறவில்லை. இவற்றுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஜியோஃபை ரூ. 349 போஸ்டிபெயிட் சலுகை:

இந்த சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 50GB டேட்டா வழங்குகிறது. மற்ற இரு சலுகைகளை போன்றே இதிலும் பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும்.  இவற்றுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. 

click me!