இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்

By Raghupati R  |  First Published Apr 16, 2023, 5:09 PM IST

ஐபிஎல் சீசனை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமா கட்டணங்களை வசூல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.


நடப்பு ஐபிஎல் சீசனை ஜியோ சினிமா தளம் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த செயலியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே உள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே-வின் கேப்டன் தோனி பேட் செய்தபோது சுமார் 2.2 கோடி பேர் ஜியோ சினிமா வழியே போட்டியை பார்த்திருந்தனர். 

ஜியோ சினிமா தளத்தில் 4K ரெஸல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் ‘வயாகாம் 18’ நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.

Tap to resize

Latest Videos

தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில் புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ, சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பிற OTT தளங்களுக்கு எதிராக ஜியோ போட்டியிட திட்டமிட்டுள்ளதால் இது விரைவில் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் இதன் உள்ளடக்கத்திற்காக பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடும் என்றும், மேலும் 100 க்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை அதன் தளத்தில் சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் கடைசி ஐபிஎல் போட்டி மே 28, 2023 அன்று நடைபெறும். அதன் பிறகு, ஜியோ சினிமா அதன் உள்ளடக்கத்திற்காக பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும். 

வணிகத் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே, ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில், ஜியோ சினிமா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை அதன் தளத்தில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.  இருப்பினும், சரியான விலை அமைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை, என்று தேஷ்பாண்டே கூறியுள்ளார். ஜியோவின் இந்த நடவடிக்கையானது நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும்.

மேலும், இந்திய ஸ்ட்ரீமிங் துறையில் அதன் நிலையை மேலும் நிலைநிறுத்தும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “ஐபிஎல் 2023 ஸ்ட்ரீமிங் தொடங்கியவுடன், ஜியோ ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் டேட்டா ஆட்-ஆன் பேக்குகள் மற்றும் சிறப்பு வவுச்சர்களுடன் கிரிக்கெட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஜியோ வழங்கும் புதிய கிரிக்கெட் ஆட்-ஆன் பேக்குகள், டேட்டா தீர்ந்துபோவதைப் பற்றி கவலைப்படாமல் ஐபிஎல் 2023 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய விரும்பும் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது. 

இந்த ஆட்-ஆன் பேக்குகள் அடிப்படைத் திட்டத்தின் மேல் கூடுதல் டேட்டாவை வழங்குகின்றன. பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஜியோ ரூ.222, ரூ.444 மற்றும் ரூ.667 விலையில் 3 கிரிக்கெட் ஆட்-ஆன் பேக்குகளை வெளியிட்டது” என்பது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டணங்களை ஜியோ அறிவிக்க உள்ளது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க..2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு

click me!