இந்தியாவில் 2 புதிய ஆப்பிள் நிறுவன தயாரிப்பு ஸ்டோர்... திறந்துவைக்க வருகிறார் அந்நிறுவன சி.இ.ஓ டிம் குக்!!

By Narendran SFirst Published Apr 11, 2023, 9:43 PM IST
Highlights

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஸ்டோர் இந்தியாவில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ இந்தியா வருகிறார். 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஸ்டோர் இந்தியாவில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ இந்தியா வருகிறார். உலகின் மிக பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை எப்போதும் உயர்ந்தே இருக்கும். விலை அதிகம் என்றாலும் அதனை வாக்குவோர் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆப்பிள் நிறுவன வருடாந்திர ஐபோன் ஏற்றுமதி பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது.

இதையும் படிங்க: அமேசான் பெயரைச் சொல்லி பணம் பறிக்கும் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை

Latest Videos

பெய்ஜிங்-வாஷிங்டன் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக சீனாவிலிருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பையிலும், ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியிலும் ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்டோரை திறக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியா வரும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் ஆப்பிளின் முதல் இந்திய ஸ்டோரை மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் எனப்படும் பிகேசி மாலில் திறக்க உள்ளார்.

இதையும் படிங்க: 8 வருடத்திற்கு பிறகு பிரதமர் மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா?

மேலும் இந்த நிகழ்விற்கு பின் பிரதமர் மோடியை டிம் குக் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது இந்திய ஆன்லைன் ஸ்டோரை 2020 இல் திறந்தது. இந்தியா உலகின் 2வது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாகவும், வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருவதால் இந்தியாவில் ஆப்பிள் தனது தயாரிப்பு ஸ்டோரை திறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!