இந்தியாவில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவைகளை மேலும் சில நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளன.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. ஜியோ, ஏர்டெல் இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி சேவையை விரிவுபடுத்துவதில் முழுமுயற்சியாக உள்ளன. ஏர்டெலில் 12 நகரங்களிலும், ஜியோவில் 8 நகரங்களிலும் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தற்போது இரு நிறுவனங்களும் 5ஜி சேவையை மேலும் சில இடங்களில் விரிவுபடுத்தியுள்ளன.
அதன்படி, ஏர்டெலானது தற்போது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபட், குருகிராம் மற்றும் கவுகாத்தி ஆகிய 11 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக விமான நிலையங்களிலும் விரிவுபடுத்தியுள்ளது.
undefined
விமானப் பயணிகள் வருகை மற்றும் புறப்படும் டெர்மினல்கள், ஓய்வறைகள், போர்டிங் கேட்கள், கவுண்டர்கள், பாதுகாப்புப் பகுதிகள், பேக்கேஜ் க்ளைம் பெல்ட்கள், பார்க்கிங் ஏரியா போன்றவற்றில் இருக்கும் போது, அவர்களது 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும்.ியும்.
இதேபோல், ஜியோ நிறுவனம் டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் பிற முக்கிய நகரங்களான பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட டெல்லி-என்சிஆர் இடங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தியது. பின்னர், கடந்த மாதம் மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் 5ஜி அறிமுகப்படுத்தியது.
இப்போது புனே நகரிலும் ஜியோ 5ஜி சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று நவம்பர் 23 ஆம் தேதி முதல், புனேவில் உள்ள ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்படுவார்கள், கூடுதல் கட்டணமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை பெற முடியும்.
சூப்பர் அப்டேட்.. இனி எல்லா ஸ்மார்ட் சாதனங்களிலும் இது கட்டாயம்!
ஜியோவைப் பொறுத்தவரையில் வெல்கம் பேக் என்ற முறையில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வரவேற்பு என்று முறையில், 5ஜி சேவை பெறுவதற்கான அழைப்பு விடுக்கப்படும். இதர பயனர்கள், ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களது 5ஜி ஆர்வத்தை பதிவு செய்யலாம்.
ஏர்டெல், ஜியோ இந்த இரண்டு நிறுவனங்களிலும் தற்போதைக்கு 5ஜி சேவைக்கான கட்டணங்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது, 5ஜி பேக் ரீசார்ஜ் பிளான்கள் இல்லை. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக ரீசார்ஜ் பேக்குகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 5ஜி நெட்வொர்க்கிற்கு சிம்மை மாற்றித் தருகிறோம் என்ற பெயரில் மோசடி அழைப்புகள் வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5ஜியைப் பொறுத்தவரையில் தனியாக சிம் எதுவும் தேவையில்லை என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. எனவே, 5ஜிக்கு மாற்றத்தருகிறோம் என்று யாராவது கால் செய்தால், அவற்றை நம்ப வேண்டாம் என்று பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.