புதிய மெரிடியன் எஸ்.யு.வி. இந்திய லான்ச் எப்போ தெரியுமா? ஜீப் வெளியிட்ட சூப்பர் அப்டேட்...!

By Kevin Kaarki  |  First Published May 17, 2022, 2:53 PM IST

டொயோட்டா பார்ச்சூனர், எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு இணையான விலையை புதிய ஜீப் மெரிடியன் கொண்டிருக்கும்.


ஜீப் இந்தியா நிறுவனம் புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடல் இந்திய விலை விவரங்கள் மே 19 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் 3-ரோ எஸ்.யு.வி மாடல்- லிமிடெட் மற்றும் லிமிடெட் ஆப்ஷன் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

சமீபத்தில் புதிய ஜீப் மெரிடியன் மாடலுக்கான உற்பத்தி பணிகள் இந்தியாவில் துவங்கியது.  மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டொயோட்டா பார்ச்சூனர், எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு இணையான விலையை புதிய ஜீப் மெரிடியன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். 

Tap to resize

Latest Videos

என்ஜின்:

ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. 2 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகிறது. இதன் முன்புற வீல் டிரைவ் சிஸ்டம் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் உள்ள பாகங்களில் 82 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பில் உருவானவை என ஜீப் தெரிவித்து உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பானரோமிக் சன்ரூப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் போன் சார்ஜிங், பவர்டு சீட்கள், பவர்டு டெயில்கேட் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், 360-டிகிரி கேமரா மற்றும் டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

click me!