ஸ்பேம் விவகாரம்.. விளக்கம் கொடுத்த பராக் அகர்வால்... பூப் எமோஜி அனுப்பிய எலான் மஸ்க்...!

By Kevin Kaarki  |  First Published May 17, 2022, 9:36 AM IST

ஒரு அக்கவுண்ட் ஸ்பேம் என்பதை கண்டறிய பொது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி வெளிப்புறமாக உருவாக்க முடியாது. 


ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் சமூக வலைதளத்தில் கடந்த நான்கு காலாண்டுகளில் கணக்கிடப்பட்ட ஸ்பேம் அக்கவுண்ட்கள் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் இருந்தது என ட்விட் செய்து இருக்கிறார். முன்னதாக ட்விட்டரில் உள்ள ஸ்பேம் அக்கவுண்ட்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் கிடைக்கும் வரை ட்விட்டரை வாங்குவதற்கான பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டுவதாக எலான் மஸ்க்  அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்களுக்கு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் பதில் அளித்து உள்ளார். தோராயமாக பார்த்தால், ட்விட்டர் ஸ்பேம் அக்கவுண்ட்கள் எண்ணிக்கை 2013 ஆண்டில் இருந்தபடியே இப்போதும் இருக்கிறது. ஒரு அக்கவுண்ட் ஸ்பேம் என்பதை கண்டறிய பொது மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி வெளிப்புறமாக உருவாக்க முடியாது. மேலும் ஒவ்வொரு நாளும் எந்த அக்கவுண்ட்கள் mDAUs ஆக கணக்கெடுக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதும் சாத்தியம் இல்லாதது என தெரிவித்து இருக்கிறார்.

💩

— Elon Musk (@elonmusk)

Tap to resize

Latest Videos

பராக் அகர்வால் ட்விட்டர் பதிவுக்கு அளித்த எலான் மஸ்க், பூப் எமோஜி வெளியிட்டு உள்ளார். “இப்படி இருக்கும் போது விளம்பரதாரர்கள் எப்படி, தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு என்ன கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்வர்? இது ட்விட்டர் நிதி நிலைமை ஆரோக்கியமாக செயல்பட அத்தியாவசியமானது,” என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

ஆட்டோமேட்டட் அக்கவுண்ட்:

இந்த ட்விட்டர் பதிவுகளை அடுத்து மியாமியில் நடைபெற்ற தனியார் கருத்தரங்கில் பேசிய எலான் மஸ்க், ட்விட்டரில் பாட்கள் அல்லது ஆட்டோமேட்டட் அக்கவுண்ட்கள் மட்டும் 20 முதல் 25 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிவித்து இருந்தார். முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்ததும், ட்விட்டர் நிறுவன பங்குகள் சரிவடைந்தன. 

ட்விட்டர் தளத்தில் பாட்களை கண்டறிவதற்கான மென்பொருள் பரிசோதனை நடைபெற வேண்டும். ட்விட்டர் மொத்த பயனர்கள் எண்ணிக்கையில் ஸ்பேம் அல்லது பாட் அக்கவுண்ட்கள் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வு முடிவு எதையும் நான் இன்னும் பார்க்கவில்லை என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். 

click me!