சாம்சங் புது போல்டபில் போன்... இணையத்தில் லீக் ஆன புது விவரங்கள்...!

By Kevin KaarkiFirst Published May 16, 2022, 5:21 PM IST
Highlights

தற்போதைய தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் S பென் ஸ்டைலஸ் வசதி கொண்டிருக்காது என கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீப காலங்களில் பலமுறை இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் சாம்சங் நிறுவனத்தின் புதிய போல்டபில் ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

மேலும் இந்த சென்சார் சாம்சங் ஏற்கனவே தனது கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கி இருப்பதை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது. ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிக ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட அம்சங்கள், ரியர் கேமராக்கள், அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. கடந்த மாதம் வெளியாகி இருந்த தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 10MP டெலிபோட்டோ கேமரா, 3X ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. 

இதுதவிர இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதே போன்று வெளியான மற்றொரு தகவலில் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனில் S பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. 

இத்துடன் அதிகளவு S பென் யூனிட்கள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. எனினும், தற்போதைய தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் S பென் ஸ்டைலஸ் வசதி கொண்டிருக்காது என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4270mAh திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவை 2002mAh மற்றும் 2268mAh ஆக பிரிக்கப்பட்டு இருக்கும். 

click me!