டாக் ஒன் பெயரில் போர்டபில் வயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்த போர்டிரானிக்ஸ் தற்போது கேமிங் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பயனர்களின் கேமிங் திறமையை மேம்படுத்தும் வகையில் இந்த ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டாக் ஒன் பெயரில் போர்டபில் வயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்த போர்டிரானிக்ஸ் தற்போது கேமிங் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ஜெனிசிஸ் மாடல் தொடர்ச்சியாக கேமிங் செய்வோருக்கு ஏற்ப கச்சிதமாக உருவாக்கப்பட்டு உள்ளது. அசத்தலான ஸ்டைல் மட்டுமின்றி அதிக உறுதியுடன், அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சேசிஸ் இந்த ஹெட்செட்டில் உள்ளது. இந்த ஹெட்செட் மெட்டல் மற்றும் பாலிகார்போனேட் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், உறுதியுடன் இருப்பதோடு எளிதில் வளைக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
இதில் உள்ள மெமரி ஃபோம் ஹெட் குஷன் மற்றும் இயர் கஃப்கள் அதிக சவுகரியமாகவும், அதிக இடையூறை ஏற்படுத்தாது. இதில் உள்ள 40mm டிரைவர்கள் சீரான ஆடியோவை எவ்வித இரைச்சலும் இன்றி வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த ஹெட்செட் FPS ரக கேம்களை விளையாட சிறப்பான தேர்வாக இருக்கும். இதில் உள்ள கஸ்டமைஸ் செய்யக் கூடிய ஆம்னி டைரெக்ஷனல் மைக்ரோபோன், பேக்கிரவுண்ட் சத்தத்தை போக்க சிறப்பானதாக இருக்கும்.
போர்டிரானிக்ஸ் ஜெனிசிஸ் ஸ்மார்ட் ஹெட்செட் மாடலில் பிரெய்டட் 1.8m நைலான் கேபிள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஹெட்செட்டை இழுக்கவும், அதிகளவு சிக்கல்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. இத்துடன் இன்லைன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹெட்செட் உடன் 12 மாதங்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
போர்டிரானிக்ஸ் ஜெனிசிஸ் ஸ்மார்ட் ஹெட்செட் அம்சங்கள்:
- POR 150
- ஜெனிசிஸ்
- ஓவர் இயர் ஹெட்போன்
- அதிக சவுகரியம் வழங்கும்
- அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்பேண்ட்
- அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மைக்ரோபோன்
- 3.5mm ஆடியோ ஜாக்
- வால்யூம் கண்ட்ரோலர்
- நைலான் பிரெயிடட் கேபிள்
- 240 கிராம் எடை
- பிளாக், கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது
போர்டிரானிக்ஸ் ஜெனிசிஸ் ஸ்மார்ட் ஹெட்செட் மாடல் விலை ரூ. 1099 ஆகும். இதன் விற்பனை போர்டிரானிக்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் முன்னணி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர்களிடம் நடைபெற்று வருகிறது.