ரோலபில் டிஸ்ப்ளே போன் உருவாக்கும் மோட்டோராலா... வெளியீடு எப்போ தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published May 9, 2022, 4:50 PM IST

இந்த ஸ்மார்ட்போன் எல்.ஜி. மற்றும் ஒப்போ நிறுவனங்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருந்த சாதனங்களை விட வித்தியாசமானதாக இருக்கிறது.


மோட்டோரோலா நிறுவனம் ரோலபில் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. முன்னதாக எல்.ஜி. நிறுவனம் ரோலபில் டிஸ்ப்ளே கொண்ட போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. எனினும், எல்.ஜி. நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை விட்டு வெளியேறி விட்டது. 

ஒப்போ நிறுவனம் ரோலபில் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் கான்செப்ட் மாடலை உருவாக்கி அதனை 2020 ஆண்டு வாக்கில் காட்சிப்படுத்தியது. இதன் வர்த்தக மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோரோலா நிறுவனம் ரோலபில் டிஸ்ப்ளே  கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

பெலிக்ஸ்:

இந்த ஸ்மார்ட்போன் பெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது உலகின் முதல் ரோலபில் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எல்.ஜி. மற்றும் ஒப்போ நிறுவனங்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருந்த சாதனங்களை விட வித்தியாசமானதாக இருக்கிறது. இதில் உள்ள ஸ்கிரீன் வளைக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால் இதை அகலமாக விரித்து டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும்.

இத்துடன் மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிளெக்சிபில் ஸ்கிரீனை செங்குத்தாகவும் நீட்டிக்க முடியும் என கூறப்படுகிறது. காம்பேக்ட் மோடில் ஸ்கிரீனின் மூன்றில் ஒரு பங்கு கீழ்புறமாக சுழற்ற முடியும். அந்த வகையில் மோட்டோரோலா பெலிக்ஸ் மாடல் பாக்கெட்களில் எளிதாக வைத்துக் கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் மார்கெடிங் பெயர் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது.

ப்ரோடோடைப்:

தற்போதைய தகவல்களின் படி மோட்டோரோலா பெலிக்ஸ் மாடல் தற்போது ஆரம்ப கட்ட பணிகளில் உள்ளது என கூறப்படுகிறது. பெலிக்ஸ் மாடலின் ப்ரோடோடைப் மாடலே இன்னும் உருவாக்கப்படவில்லை. இதன் காரணமாக மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மாடலின் மாடிபை செய்யப்பட்ட வெர்ஷனில் இதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மோட்டோரோலா பெலிக்ஸ் மாடல் அறிமுகமாக மேலும் ஒரு ஆண்டு ஆகும் என தெரிகிறது.

click me!