ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் ANC.. அதிரடி அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ

By Kevin Kaarki  |  First Published May 5, 2022, 4:31 PM IST

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற விவரம் லீக் ஆகி உள்ளது.


கூகுள் நிறுவனம் 2020 வாக்கில் தனது பிக்சல் பிக்சல் பட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும். இந்த நிலையில், கூகுள் நிறுவனம் மற்றொரு இயர்பட்ஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் பிக்சல் பட்ஸ் ப்ரோ பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. 

புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் வெளியீட்டுக்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினு, புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் நான்கு விதமான நிறங்களில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளயிாகி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

மேம்பட்ட மாடல்:

கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் கூகுள் பிக்சல் பட்ஸ் A சீரிஸ்-இன் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். அம்சங்களை பொருத்தவரை புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வான கூகுள் I/O 2022  இந்த ஆண்டு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில், டிப்ஸ்டர் ஜான் புரோசர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ விவரங்களை வெளியிட்டு உள்ளார். அதன்படி புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் - ரியல் ரெட், கார்பன், லிமன்செல்லோ மற்றும் ஃபாக் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கும் என அவர் தெரிவித்து இருக்கிறார். புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் கூகுள் I/O நிகழ்விலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி கூகுள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அம்சங்கள்:

புதிய கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் பட்ஸ் A மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

இந்தியாவில் கூகுள் பிக்சல் பட்ஸ் A மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இதன் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அதிநவீன அம்சங்கள் மற்றும் புது மாடல் என்பதால் இதன் விலையில் கூகுள் சமரசம் செய்யாது என தெரிகிறது.

click me!