இருவேறு பிராசஸர்... ஸ்டைலஸ் சப்போர்ட்... இணையத்தில் லீக் ஆன ரியல்மி பேட் 5ஜி விவரங்கள்..!

By Kevin Kaarki  |  First Published May 9, 2022, 4:26 PM IST

ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய 5ஜி டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம். 


ரியல்மி பேட் 5ஜி மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய டேப்லெட் மாடல் இரண்டு வித பிராசஸர்களுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. அதன்படி ரியல்மி பேட் 5ஜி வேரியண்ட் இரு வித ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட்களுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ரியல்மி அறிமுகம் செய்யப் போகும் அடுத்த சாதனம் ரியல்மி பேட் 5ஜி மாடல் தான் என தெரிவித்து இருக்கிறார். இந்த டேப்லெட் மாடலின் ப்ரோடோடைப் வெவ்வேறு சிப்செட்களை கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

அம்சங்கள்:

அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட டேப்லெட் LCD ஸ்கிரீன், 2.5K ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் 8360mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த டேப்லெட் உடன் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி பேட் 5ஜி மாடலின் மற்றொரு வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த வேரியண்ட் உடனே அறிமுகம் செய்யப்படுமா அல்லது ரியல்மி பேட் 5ஜி மாஸ்டர் எக்ஸ்புளோரர் எடிஷன் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

டேப்லெட் சந்தை:

ரியல்மி நிறுவனம் டேப்லெட் சந்தையில் ரியல்மி பேட் மாடலுடன் கடந்த ஆண்டு களமிறங்கியது. ரியல்மி பேட் 4ஜி மாடலில் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது.  இதுதவிர ஏப்ரல் மாத வாக்கில் ரியல்மி நிறுவனம் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா போன்ற சந்தைகளில் ரியல்மி பேட் மினி மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இதைத் தொடர்ந்து ரியல்மி பேட் 5ஜி மாடல் வெளியீட்டை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் வெளியிட்டு உள்ளார். இந்த மாடல் சீனா தவிர்த்து சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. 

click me!