20 ஆண்டுகள் பாரம்பரியம்... விற்பனையை திடீரென நிறுத்தும் ஆப்பிள்... ஏன் தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published May 11, 2022, 4:51 PM IST

ஆப்பிள் நிறுவனத்தில் மியூசிக் எப்போதும் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இசை துறை மட்டும் இன்றி ஐபாட் பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்தது.


ஆப்பிள் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் ஐபாட் சாதனத்தின் விற்பனையை நிறுத்த முடிவு செய்து உள்ளது. ஆப்பிள் வெளியிட்ட கடைசி ஐபாட் மாடலாக ஐபாட் டச் இருந்து வருகிறது. ஐபாட் மாடலின் விற்பனையை நிறுத்துவதாக ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து உள்ளது. 

எம்.பி.3 பிளேயரான ஐபாட்  ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற சாதனங்களான ஐபோன், ஐபேட் மற்றும் ஹோம்பாட் மினி உள்ளிட்டவைகளை விட மிகையளவானது என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. தற்போதைய ஸ்டாக் இருக்கும் வரை ஐபாட் டச் மாடல் அதிக விற்பனையாளர்கள் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். 

Tap to resize

Latest Videos

பிரபல டிஜிட்டல் மியூசிக்:

2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒரிஜினல் ஐபாட் மாடல் அதன் தனித்துவம் மிக்க டிசைன் மற்றும் போர்டபிலிட்டி காரணமாக பிரபலமான டிஜிட்டல் மியூசிக் சாதனமாக உருவெடுத்தது. மிக மெல்லிய எம்.பி.3 பிளேயராக வலம் வந்த ஐபாட் மாடல் இதுவரை 26 அப்டேட்களை பெற்று இருக்கிறது. இதன் கடைசி அப்டேட் செய்யப்பட்ட மாடலாக ஐபாட் டச் 2019 மே 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. 

2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் மாடல் அதன் பின் ஸ்பாடிபை மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்று ஸ்டிரீமிங் சேவைகளின் அசுர வளர்ச்சி காரணமாக ஐபாட் சாதனத்திற்கான தேவை குறைய ஆரம்பித்தது. 

தலைசிறந்த அனுபவம்:

“ஆப்பிள் நிறுவனத்தில் மியூசிக் எப்போதும் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இசை துறை மட்டும் இன்றி ஐபாட் பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்தது- மேலும் இது மியூசிக் எவ்வாறு கண்டறியப்படுகிறது, கேட்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதை மாற்றி அமைத்தது.”

“இன்று, ஐபாட் மாடலுக்கான ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஐபோன் முதல் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஹோம்பாட் மினி, மேக், ஐபேட் மற்றும் ஆப்பிள் டி.வி. என எங்களின் அனைத்து சாதனங்களிலும் அசாத்திய மியூசிக் அனுபவத்தை நாங்கள் புகுத்தி இருக்கிறோம். ஆப்பிள் மியூசிக் சந்தையில் - ஸ்பேஷியல் ஆடியோ வசதியுடன் தலைசிறந்த அதிக தரமுள்ள சவுண்ட் வழங்குகிறது- இசையை அனுபவித்து, மகிழ இதை விட சிறப்பான தளம் இருக்க முடியாது,” என ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை பிரிவு மூத்த துணை தலைவர் கிரெக் ஜோஸ்வியக் தெரிவித்தார்.

click me!