ஜாகுவார் நிறுவனம் விஷன் கிரான் டூரிஸ்மோ ரோட்ஸ்டர் மாடலை கிரான் டூரிஸ்மோ 7 எனும் PS5 கேமில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜாகுவார் நிறுவனம் விஷன் கிரான் டூரிஸ்மோ ரோட்ஸ்டர் மாடலை பிளே ஸ்டேஷன் கேம் சீரிஸ், கிரான் டூரிஸ்மோ 7-இல் அறிமுகம் செய்து இருக்கிறது. கிரான் டூரிஸ்மோ 7 ரேசிங் கேம் மார்ச் 4, 2022 அன்று அறிமுகமானது. இதில் விஷன் கிரான் டூரிஸ்மோ தவிர இLர கான்செப்ட் கார் மாடல்களான விஷன் கிரான் டூரிஸ்மோ கூப் மற்றும் விஷன் கிரான் டூரிஸ்மோ SV உள்ளிட்டவையும் இடம்பெற்று இருக்கின்றன.
ஜாகுவார் விஷன் கிரான் டூரிஸ்மோ ரோட்ஸ்டர் ஆல்-எலெக்ட்ரிக் சிங்கில் சீட்டர் ரேஸ் கார் ஆகும். இது கிரான் டூரிஸ்மோ 7 ரேசிங் சிமுலேட்டர் கேமிற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. விஷன் கிரான் டூரிஸ்மோ கூப் மற்றும் விஷன் கிரான் டூரிஸ்மோ SV மாடல்கள் டிசம்பர் 2020 வாக்கில் காட்சிப்படுத்தப்பட்டன. இவையும் கேமில் அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மாடல்கள் ஆகும்.
விஷன் கிரான் டூரிஸ்மோ ரோட்ஸ்டர் மாடலில் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. மூன்றில் ஒரு மோட்டார் முன்புற ஆக்சிலிலும், மற்ற இரு மோட்டார்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஜாகுவார் TCS ரேசிங் அணி உருவாக்கி இருக்கிறது. இந்த காரின் ஒருங்கிணைந்த செயல்திறன் 1006 பி.ஹெச்.பி. பவர், 1200 நியூட்டன் மீட்டர் இன்ஸ்டண்ட் பீக் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரில் ஓபன் காக்பிட் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஏரோடைனமிக்ஸ் காம்ப்யூடேஷனல் ஃபுளூயிட் டைனமிக் டூல்களை பயன்படுத்தி ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் குறைந்த எடையிலான ஸ்டிஃப் கார்பன் ஃபைபர் மோனோக் சேசிஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆல் எலெக்ட்ரிக் எண்டியூரன்ஸ் ரேஸ் கார் மாடலான ஜாகுவார் விஷன் கிரான் டூரிஸ்மோ SV இந்த கேமில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஜாகுவார் SV உருவாக்கிய நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் ஒருங்கிணைந்த செயல்திறன், 1877 பி.ஹெச்.பி.-யாக இருக்கிறது. இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 410 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.