இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய ஏவுகணையான எஸ்எஸ்எல்வியின் மூன்றாவது சோதனையும் விண்ணில் செலுத்தப்படும்.
இஸ்ரோ 2024ஆம் ஆண்டில் ஆறு பிஎஸ்எல்வி, மூன்று ஜிஎஸ்எல்வி மற்றும் ஒரு மார்க்-3 ஏகவுணைகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய ஏவுகணையான எஸ்எஸ்எல்வியின் மூன்றாவது சோதனையும் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் இரண்டு சோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. மனிதர்களை ஏற்றிச் செல்லும் தொகுதி மற்றும் சுற்றுப்பாதை தொகுதியை சோதித்துப் பார்க்கத் உள்ளது. மேலும், சோதனை ஏவுகணையை பயன்படுத்தி பல சூழ்நிலைகளில் ககன்யான் திட்டத்தின் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தை சோதனையிடவும் இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மூலம் ஒரு வணிக ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்யவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது.
கத்தார் சிறையில் உள்ள 8 மரண தண்டனைக் கைதிகளைச் சந்தித்த இந்தியத் தூதர்
ஆறு பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஒரு விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள், ஒரு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், இரண்டு தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்கள் மற்றும் NSIL இன் இரண்டு வணிகப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
மூன்று ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் வானிலை ஆய்வு செயற்கைக்கோள், நேவிகேஷன் செயற்கைக்கோள் மற்றும் நாசா-இஸ்ரோ இணைந்து தயாரித்த ராடார் செயற்கைக்கோள் ஆகியவை ஏவப்பட்ட உள்ளன. வணிக ரீதியாக எல்விஎம் 3 ராக்கெட் ஒன்றும் விண்ணில் ஏவப்படும்.
பதவியேற்ற உடனே முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!