இன்டர்நேஷனல் பிராடுகளுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு! சர்வதேச அழைப்புகளுக்கு புதிய தடை!

By SG BalanFirst Published Dec 6, 2023, 10:11 PM IST
Highlights

இதுவரை, 2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சரின் பதலில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதால், 2023-24 நிதியாண்டில் 65 தொலைத்தொடர்பு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் போலியான இந்திய எண்களைப் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளைச் செய்ய அனுமதித்தவை ஆகும்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

Latest Videos

"இதுவரை, 2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பும், 2022-23 நிதியாண்டில் 62, 2021-2022 நிதியாண்டில் 35 தொலைத்தொடர்பு அமைப்புகள் மோசடிக்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டன" என்றும் அமைச்சரின் பதலில் கூறப்பட்டுள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணைய தளங்களுக்குத் தடை! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

சர்வதேச தொலைதூர ஆபரேட்டர்களுக்கு (ILDOs) இது குறித்து தொலைத்தொடர்புத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சி.எல்.ஐ. (CLI) எனப்படும் அடையாள எண்கள் இல்லாத எண்கள், முறையற்ற சி.எல்.ஐ கொண்ட எண்கள் மற்றும் +11, 011, 11, +911, +912, +913, +914, +915 ஆகிய எண்களில் தொடங்கும் எண்கள் ஆகியவற்றில் இருந்து அழைப்புகள் வருவதைத் தடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

"தொலைத்தொடர்புத்துறை சட்ட அமலாக்க முகவர் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் (TSPs) ஒருங்கிணைந்து, சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகளைக் கண்டறிந்து வருகிறது. தேச விரோத நடவடிக்கைகள், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சட்டவிரோத அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன" என்றும் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார்.

"தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் சரிபார்ப்புக்குப் பின் இதுபோன்ற மொபைல் இணைப்புகளைத் துண்டித்து வருகின்றன. சுமார் 13.08 லட்சம் மொபைல் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன" என்றும் அமைச்சர் கூறினார்.

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

click me!