Iq009 series : ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் ஃபிளாக்‌ஷிப் போன் அறிமுகம் செய்த ஐகூ

By Kevin Kaarki  |  First Published Feb 23, 2022, 4:46 PM IST

ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஐகூ9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஐகூ 9 SE, ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் ஐகூ 9 சீரிசில் இடம்பெற்று இருக்கின்றன. ஐகூ 9 ப்ரோ அம்சங்கள் அதன் சீன வேரியண்டில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே உள்ளது. 

ஐகூ 9 மாடலில் 6.56 இன்ச் FHD+ ஸ்கிரீன்,120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், 3D கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ மாடல்களில் முறையே 4350mAh மற்றும் 4700mAh டூயல் செல் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 120 வாட் அல்ட்ரா-ஃபாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோ மாடலில் 50 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஐகூ 9 SE அம்சங்கள்

- 6.62 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 5nm பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GBLPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட் 
- 48MP கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS
- 13MP 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன்
- 2MP மோனோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ,ஸ்டீரியோ ஸ்பீக்கர்,ஹை-ஃபை ஆடியோ 
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4,500mAh பேட்டரி
- 66 வாட் சூப்பர் ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் 

ஐகூ 9 அம்சங்கள்

- 6.56 இன்ச் 2376x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் 5nm பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 12GBLPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட் 
- 48MP கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், கிம்பல் ஸ்டேபிலைசேஷன்
- 13MP 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 13MP போர்டிரெயிட் கேமரா, f/2.46
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ,ஸ்டீரியோ ஸ்பீக்கர்,ஹை-ஃபை ஆடியோ 
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4,350mAh பேட்டரி
- 120 வாட் சூப்பர் ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் 

ஐகூ 9 ப்ரோ அம்சங்கள்

- 6.78 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் HD+ curved E5 LTPO AMOLED டிஸ்ப்ளே, HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 பிராசஸர்
- அட்ரினோ next-gen GPU
- 8GB / 12GB LPDDR5 ரேம்
- 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம் ஸ்லாட் 
- 50MP கேமரா, f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ், கிம்பல் ஸ்டேபிலைசேஷன்
- 50MP 150° அல்ட்ரா வைடு சென்சார், f/2.27
- 16MP போர்டிரெயிட் கேமரா, f/2.23
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே 3D அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் 
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ,ஸ்டீரியோ ஸ்பீக்கர்,ஹை-ஃபை ஆடியோ 
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4,700mAh பேட்டரி
- 120 வாட் சூப்பர் ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் 
- 50 வாட் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங்
- 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

விலை விவரங்கள்

ஐகூ 9 SE 8GB+128GB ரூ. 33,990
ஐகூ 9 SE 12GB+256GB ரூ.37,990
ஐகூ 9 8GB+128GB ரூ. 42,990
ஐகூ 9 12GB+256GB ரூ. 46,990
ஐகூ 9 ப்ரோ 8GB+256GB ரூ. 64,990
ஐகூ 9 ப்ரோ 12GB+256GB ரூ. 69,990
ஐகூ 50 வாட் வயர்லெஸ் சார்ஜர் ரூ. 4,499
ஐகூ கேம்பேட் ரூ. 2999

ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விற்பனை மார்ச் 2 ஆம் தேதி துவங்குகிறது. ஐகூ 9SE மாடலின் முன்பதிவு மார்ச் 2 ஆம் தேதி துவங்குகிறது.

click me!