Vivo V23e 5G price : அசத்தல் அம்சங்களுடன் புது 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த விவோ

By Kevin Kaarki  |  First Published Feb 21, 2022, 12:59 PM IST

விவோ நிறுவனத்தின் புதிய V23e 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


விவோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது  அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த V23 சீரிசில் புது மாடல் ஆகும். புதிய விவோ V23e மாடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், மீடியாடெக்  டிமென்சிட்டி 810 பிராசஸர், 8GB ரேம் மற்றும் 44MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. புதிய விவோ V23e 5ஜி ஸ்மார்ட்போன் 4050mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

விவோ V23e 5ஜி அம்சங்கள்

- 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 8GB LPDDR4x ரேம்
- 128GB UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரரா, f/2.4
- 44MP செல்ஃபி கேமரா, f/2.0
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 4050mAh பேட்டரி
- 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய விவோ V23e ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் சன்ஷைன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 25,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் இதர முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

click me!