ரியல்மி நிறுவனத்தின் புதிய GT நியோ 2 ஸ்மார்ட்போனிற்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது GT நியோ 2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.31,999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. ஃபிளாக்ஷிப் தர அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய GT நியோ 2 தற்போது மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.
இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் ரியல்மி GT நியோ 2 ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ. 22,999 எனும் மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போனை எவ்வித கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்கும் போதும் ரூ. 6 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இதன் விலை ரூ. 25,999 என மாறிவிடும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட தனியார் வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு கூடுதலாக ரூ.3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவை இரண்டையும் சேர்க்கும் போது ரியல்மி GT நியோ 2 மாடலுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இதனால் புதிய ரியல்மி GT நியோ 2 ஸ்மார்ட்போனினை ரூ. 22,999 விலையில் வாங்கிட முடியும். இது குறுகிய கால சலுகை என்பதோடு இது 8GB ரேம்,128GB மெமரி மாடலுடன் மட்டுமே பெற முடியும்.
ரியல்மி GT நியோ 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே, 64MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ரியல்மி GT நியோ 2 அம்சங்கள்
- 6.62 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz E4 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 8GB / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2.0
- டூயல் சிம்
- 64MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6,ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்