‘எல்லோரும் எங்களை மன்னிச்சுருங்க’ - சாரி கேட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம்!

Published : Nov 01, 2022, 01:20 PM IST
‘எல்லோரும் எங்களை மன்னிச்சுருங்க’ - சாரி கேட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம்!

சுருக்கம்

இன்ஸ்டாகிராம் நேற்று மீண்டும் திடீரென முடங்கியது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்கள் கணக்குகள் செயலிழந்ததாக புகார் அளித்த நிலையில், இன்ஸ்டாகிராம் நிறுவனம் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் நேற்று முடங்கியது. இதனால் பயனர்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டனர். நேற்று மாலை திடீரென தங்கள் கணக்குகள் முடங்கியதாக பயனர்கள் ட்விட்டரில் புகார் அளித்து உள்ளனர்.  

பயனர் ஒருவர் தனது மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி என்னை உள்ளிட்டு தனது அக்கவுண்டை தொடருமாறு இன்ஸ்டாகிராம் அறிவுறுத்தியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.   டவுண்டெக்டரின் ( DownDector ) கூற்றுப்படி ஏராளமான பயனர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த புகாரை அளித்து உள்ளனர். 

பயனர் ஒருவர் தனது மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி என்னை உள்ளிட்டு தனது அக்கவுண்டை தொடருமாறு இன்ஸ்டாகிராம் அறிவுறுத்தியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.   டவுண்டெக்டரின் ( DownDector ) இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏராளமான பயனர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த புகாரை அளித்து உள்ளனர். 

ஏழாயிரத்திற்கும் அதிகமான புகார்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திடீர் முடக்கம் ஏராளமான பயனர்களை பாதித்து உள்ளது. சிலர் தங்கள் கணக்குகள் முடக்கப்பட்டதால் தங்களை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த திடீர் முடக்கம் ஆண்ட்ராய்டு , ios ஆகிய இரண்டு பயனர்களையும் பாதித்து உள்ளது. 

WhatsApp Update: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்!

இதனை எவ்வாறு சீரமைப்பது என பயனர்கள் தவித்த நிலையில், இன்ஸ்டாகிராம் அறிவிப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அதில்,  “உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதற்கு வருந்துகிறோம். தற்போது இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு விட்டது. சாரி” என்று இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.

இதற்கு முன்பு இதேபோல கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ் அப் திடீரென இரண்டு மணி நேரம் முடங்கியது இதனால் பயனர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.  தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டதாக மெட்டா நிறுவனம் அறிவித்தது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

இவ்வளவு காசா? ஜியோ, ஏர்டெல் எவ்வளவோ பரவாயில்லை! மிரள வைக்கும் ஸ்டார்லிங்க் கட்டணம்!
அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!