WhatsApp Update: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்!

By Dinesh TGFirst Published Nov 1, 2022, 12:19 PM IST
Highlights

வாட்ஸ்அப்பில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பி, அதை வாட்ஸ்அப் வெப் தளத்திலும் பார்க்கும் வகையிலான புதிய அப்டேட் வரவுள்ளது.

வாட்ஸ்அப்பில் ஒரு நோட்ஸ் (குறிப்பு) எடுக்க வேண்டுமென்றால், நண்பர்கள் யாருக்காவது அந்த குறிப்பை அனுப்புவோம். அது வாட்ஸ்அப்பில் அப்படியே இருப்பதால் எப்போது வேண்டுமென்றாலும் அந்த சேட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. 

இன்னும் சிலர் தங்கள் மொபைல் நம்பரையே போனில் பதிவு செய்து கொண்டு, அவர்களது வாட்ஸ்அப் நம்பருக்கே மெசேஜ் அனுப்பி குறிப்பேடு போல் பயன்படுத்துவார்கள். ஆனால், இம்முறையில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் அத்தகைய மெசேஜ்களைப் பார்க்க முடியாது. வாட்ஸ்அப் வெப் மூலம் அனுப்பினால், அந்த மெசேஜை போனிலுள்ள வாட்ஸ்அப்பில் பார்க்க முடியாது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனமே ஒரு வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு தாங்களே மெசேஜ் அனுப்பலாம். இந்த மெசேஜ்களை வாட்ஸ்அப் வெப்பிலும் பார்க்கலாம், போனிலுள்ள வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம். 

Youtube Tips: இப்படி கூட யூடியூப்பை பயன்படுத்தலாம் செய்யலாம்!

இதுதொடர்பாக wabetainfo என்ற தளத்தில் செய்திகள் வந்துள்ளன. அதன்படி, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.24.2 என்ற ஆண்டராய்டு பதிப்பில் மேற்கண் அம்சம் சோதிக்கப்பட்டு வருகிறது. இது வெற்றியடைந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதே போல் வாட்ஸ்அப் குரூப்புக்கான ப்ரொபைல் பிக்சரும் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. 

கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து பயனுள்ள அப்டேட்டுகள் கொண்டு வரப்படுகின்றன. சமூக வலைதள நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில் வாட்ஸ்அப்பை மிஞ்சும் வகையில் மற்ற டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!