ஐ போன் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து, ஊக்குவிக்கும் விதமாக தற்போது இந்தியாவிலேயே ஐ போன் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
அதன்படி, Wistron நிறுவனம் ஐ போன் தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடுத்ததாக, தேவைப்பட்டால் பாக்ஸ்கான் நிறுவனத்திடமும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
பீனீயா, பெங்களூரு :
கர்நாடக மாநிலம் பீனியாவில், தயாரிப்பு நிறுவனம் அமைத்து , வரும் ஏப்ரல் மாதம் முதல் முழுவீச்சில் ஐ போன் தயாரிப்பு பணி தீவிரம் அடையும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
ஐ போன் 8 :
ஐ போன் 7 அடுத்து , தற்போது அடுத்த தலைமுறையாக வெளிவரவுள்ள ஐ போன் 8 ( வயர்லெஸ் சார்ஜிங்) என தெரிகிறது.
மேலும் இந்தியாவில் ஐ போன் தயாரிப்பு குறித்து, நாளை மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது