போர்டபல் டவர் மூலம் போராட்டத்தை வெற்றி பெற செய்த Jio ....!
ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுமே ஒன்று திரண்டுள்ளனர் மெரினாவில். ராப்பகலாக, தொடர்ந்து இன்றோடு ஐந்தாவது நாளாக , ஜல்லிகட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் இளைஞர்கள் பெண்கள், மாணவர்கள் அனைவரும் , மெரினாவிலேயே தங்கி , உயிர் போனாலும் பரவாயில்லை என , முழு ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள் இளைஞர்கள் .
கூட்டத்தை கலைக்க இரவு நேரங்களில், மெரீனா கடற்கரையில் உள்ள மின் விளக்குகளையும் துண்டித்தனர்.மின்சாரம் தடை செய்யப்பட்டது இதனால், பல டவர்கள் இயங்காமல் போனது. சிக்னல் கிடைக்காமல், யாருக்கும் போன் பேச முடியாமல், விவரங்களை உடனுக்குடன் பகிரவும் எந்த ஒரு சப்போர்ட் இல்லாமல் , மிகுந்த கஷ்டத்தில் இருந்த இளைஞார்களுக்கு மாபெரும் கை கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ...!
மெரினாவில் புதிய டவர் வைத்த ரிலையன்ஸ் ஜியோ....!
டவர் கிடைக்காமல் கஷ்டப்பட்ட இளைஞர்களுக்கு, முக்கியமான நேரத்தில் கை கொடுத்தது ஜியோவின் போர்டபல் டவர். மெரினாவில் உள்ள அனைத்து போரட்டக்காரர்களுக்கும் டவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக , ஒரு பெரிய வாகனத்தில் டவர் வைத்து, மெரீனா கடற்கரையிலேயே நிறுத்தி வைத்துவிட்டது ரிலையன்ஸ் ஜியோ.
ஏற்கனவே எண்ணிலடங்கா, சலுகைகளை வாரி வழங்கி அனைவரின் உள்ளதையும் கொள்ளைக்கொண்ட ஜியோ, தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக , போராட்ட்டகாரர்களுக்கு சரியான நேரத்தில், மாபெரும் உதவியை அளித்து அனைவரின் உள்ளத்தையும் வென்றுள்ளது ஜியோ.
இந்த வேளையில், இளைஞர்கள் அனைவரும் தங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் அம்பானிக்கு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தை வெற்றி பெற செய்வதில், ஜியோ விற்கும் பங்கு என்கிறார்கள் மெரினாவை கலக்கும் இளைஞர்கள்