நெட்ஃபிளிக்ஸ் முதல் பைஜூஸ் வரை.. 70 கோடி பேர் டேட்டா மொத்தமா போச்சு - தமிழ்நாடும் லிஸ்ட்ல இருக்கு

By Raghupati RFirst Published Apr 2, 2023, 11:52 AM IST
Highlights

24 மாநிலங்களை சேர்ந்த 70 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் முதல் பைஜூஸ் வரை, 67 கோடிக்கும் அதிகமான மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் பைஜூஸ், வேதாந்து, கேப் பயனர்கள், ஜிஎஸ்டி, ஆர்டிஓ, அமேசான், நெட்ஃபிளிக்ஸ், பேடிஎம், ஃபோன்பே போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவுகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள 'இன்ஸ்பைர்வெப்ஸ்' என்ற இணையதளத்தின் மூலம் செயல்பட்டு வந்தார். 

Latest Videos

தெலுங்கானாவில் உள்ள சைபர்பேட் போலீசார், 66.9 கோடி மக்கள் மற்றும் நிறுவனங்களின் தரவுகளை வைத்திருப்பதாக நம்பப்படும் ஒரு பெரிய டேட்டா திருட்டு நெட்வொர்க்கை முறியடித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த தரவுகள் அதாவது டேட்டா 104 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, 24க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 8 பெருநகரங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் வினய் பத்வாஜ் ஆவார். ஹராயானின் ஃபரிதாபாத்தில் உள்ள தனது இணையதளமான “Inspirewebz” இன் கீழ் அவர் தனது தரவு திருட்டை மறைத்து வைத்திருந்தார். கிளவுட் டிரைவ் இணைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரவுத்தொகுப்பை விற்றார். இதுகுறித்து சைபராபாத் காவல்துறை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க..ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

busted a data theft gang who has been involved in the theft, procurement, holding, and selling of personal and confidential data of 66.9 crore individuals and organizations across 24 states and 8 metropolitan cities. pic.twitter.com/Y6bdOfbGUF

— Cyberabad Police (@cyberabadpolice)

"குற்றம் சாட்டப்பட்டவர் அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முக்கியமான தகவல்களைக் கொண்ட 135 வகைகளின் தரவுகளை வைத்திருந்தார், மேலும் கைது செய்யப்பட்ட போது போலீசார் இரண்டு மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் தரவுகளை கைப்பற்றினர்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தரவுகளை சட்டவிரோதமாக திருடி பின்னர் சந்தையில் விற்றுள்ளனர். குற்றவாளியிடம் எட்-டெக் நிறுவனங்களான BYJU மற்றும் வேதாந்து மாணவர்களின் தரவு உள்ளது. GST (Pan India), RTO (Pan India), Amazon, Netflix, Paytm, Instagram, Zomato, Policy Bazar போன்ற முக்கிய நிறுவனங்களின் வாடிக்கையாளர் தரவையும் குற்றம் சாட்டப்பட்டவர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

click me!