2 மணிநேரத்தில் பாலம் ரெடி! 3D பிரிண்டிங் மூலம் அசத்திய ஐஐடி சிவில் மாணவர்கள்!

By SG Balan  |  First Published Apr 2, 2023, 12:09 AM IST

ஹைதராபாத் ஐஐடி கட்டிடப் பொறியியல் ஆராய்ச்சிக் குழுவினர் வடிவமைத்த பாதசாரிகளுக்கான நடைப் பாலம் 3டி பிரிண்டிங் மூலம் 2 மணிநேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


ஐஐடி ஹைதராபாத் மாணவர்கள் சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து முதன்முதலாக முப்பரிமாண அச்சிடல் (3D Printing) முறையில் ஒரு பாலத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

ஐஐடிஎச் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே.வி.எல். சுப்ரமணியம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு வடிவமைத்த பாலத்தின் மாதிரி வடிவம் 3D கான்கிரீட் பிரிண்டிங் நிறுவனமான சிம்ப்ளிஃபோர்ஜ் நிறுவனத்தால் அச்சிடப்பட்டு உருவாக்கப்பட்டது.

Latest Videos

undefined

பாதசாரிகளுக்கான பாலமாக வடிவமைக்கப்பட்ட இந்த பாலம் தற்போது சுமை தாங்கும் சோதனைக்கு உட்பட்டுள்ளது. கான்கிரீட்டைப் பயன்படுத்துவதைக் குறைக்கும் வகையில் இந்தப் பாலம் பரந்த அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது பாலத்தை உருவாக்கிய குழுவினர் கூறுகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் - அமைச்சர் எ.வா. வேலு அறிவிப்பு

இந்தப் பாலத்தின் பகுதிகள் இரண்டு மணிநேரத்திற்குள் அச்சிடப்பட்டன. பின் அவை சித்திப்பேட்டை சார்விதா மைதானத்தில் ஒன்றிணைக்கப்பட்டு பாலம் உருவானது. "3டி கான்கிரீட் பிரிண்டிங் ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். விரைவாக கட்டுமானத் தொழிலை மாற்றுவதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு தேவையான வடிவமைப்பு முறைகள், செயலாக்கம் மற்றும் விநியோக அமைப்புகளில் முன்னேற்றம் தேவை" என்று பேராசிரியர் சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.

சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸின் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணா ஜீடிபள்ளி கூறுகையில், இந்த பாலம் 3டி கட்டுமான பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் திறமைக்குச் சான்று என்றார். மேலும், "இந்த தொழில்நுட்பமானது அதன் வேகம் மற்றும் எளிமை காரணமாக உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை  போன்ற துறைகளில் பலவகையில் பயன்படக்கூடியது. உள்கட்டமைப்பு மற்றும் பிற தொழில்களில் 3D கான்கிரீட் பிரிண்டிங்கின் சாத்தியக்கூறுகளை ஆராய இந்தத் திட்டம் மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

மோடி அனைவரையும் முட்டாள் ஆக்குகிறார் என்று சொல்வார்கள்: வந்தே பாரத் விழாவில் பிரதமர் பேச்சு

click me!