நானோ ரோபோ உதவியுடன் 2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் சாகா வரம் பெற வாய்ப்பு உள்ளது என்று கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல். 75 வயதான கம்ப்யூட்டர் இன்ஜினீயரான குர்ஸ்வேல் இதுவரை கூறிய 147 கணிப்புகளில் 86 சதவீதம் அப்படியே பலித்துள்ளது.
2000ஆம் ஆண்டுக்குள் செஸ் விளையாட்டில் மனிதர்களை கம்ப்யூட்டர்கள் வெல்லும் என 1990ஆம் ஆண்டே கணித்திருந்தார். இதேபோல இன்டர்நெட் வசதி, வயர்லெஸ் தொழில்நுட்பம் போன்றவை பற்றியும் ரே குர்ஸ்வேல் கூறிய கணிப்புகள் துல்லியமாக நடந்துள்ளன.
undefined
ரே குர்ஸ்வேல் அண்மையில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் மனிதர்கள் சாகாவரம் பெறுவது பற்றிப் பேசியுள்ளார். 2005ஆம் ஆண்டு வெளியான `தி சிங்குலாரிட்டி இஸ் நியர்' (The Singularity is Near) என்ற புத்தகத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் மரணமில்லாத வாழ்க்கையை அடைய தொழில்நுட்பம் உதவும் எனக் கூறியிருப்பதை நினைவுகூர்ந்தார்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த வைக்கம் போராட்டம்: முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு
"மரபியல், ரோபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விரைவில் 'நானோபோட்ஸ்' (Nanobots) வரவுள்ளன. இந்த மிக நுண்ணிய ரோபோக்களை நரம்புகள் வழியாக மனித உடலில் செலுத்த முடியும். இவை 50 - 100 நானோ மீட்டர் மட்டுமே அகலம் கொண்டிருக்கும். ஏற்கெனவே, டிஎன்ஏ ஆய்விலும் செல் இமேஜிங்கிலும் நானோபோட் பயன்பாட்டைக் காணமுடிகிறது" என்று அவர் சொல்கிறார்.
"முதுமை அடைதல், உடல்நலக் குறைபாடு போன்றவற்றில் இருந்து மனிதர்களை காக்கவும், உடலில் உள்ள செல்களில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்யவும் நானோ ரோபோவை பயன்படுத்தலாம். அப்போது மனிதர்கள் தாங்கள் விரும்பியதை எல்லாம் சாப்பிடலாம், அதே சமயத்தில் ஒல்லியாகவும் உறுதியாகவும் இருக்கலாம்" என்கிறார் குர்ஸ்வேல்.
2003ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது, உடலில் உள்ள நானோ ரோபோ அவற்றை வெளியேற்றும் வேலையைச் செய்யும் என தெரிவித்திருந்தது.
சிங்கப் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அஞ்சல் சேமிப்புத் திட்ட வட்டி விகிதம் உயர்வு! முழு விவரம்