ChatGPT 4 இலவசமாக வேண்டுமா? ரொம்ப ஈஸி தான்!

By Asianet Tamil  |  First Published Mar 16, 2023, 9:48 PM IST

மைக்ரோசாப்ட் Bing AI, Bing Chat ஆனது ChatGPT Plus அல்லது ChatGPT-4 இன் அடிப்படை தொழில்நுட்பமான GPT-4 மூலம் இலவசமாக பயன்படுத்தலாம். இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


கடந்த சில வாரங்களாக எங்கும் AI, எதிலும் AI என்பது போல AI பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. குறிப்பாக சாட் ஜிபிடி வந்த பிறகு, AI பயன்பாட்டிற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக, GPT-4, ChatGPT Plus., ChatGPT-4 AI சாட்போட்டை இயக்கும் அடிப்படை தொழில்நுட்பம், இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. 

GPT-4 என்பது ஒரு "பெரிய மல்டிமாடல் மாடல்" என்று கிரியேட்டர்கள் கூறுகின்றனர், இது பல்வேறு தொழில்முறை மற்றும் கல்விசார் முறைகளில் மனிதர்களை போலவே சிறப்பாக வேலை செய்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த GPT-3/ GPT 3.5 போலல்லாமல், இந்த புதிய GPT-4 ஆனது இமேஜ் வகை கோப்புகளையும், அதிலுள்ள படங்களையும் புரிந்து கொள்கிறது. குறிப்பாக அப்லோடு செய்யப்படும் படத்தில் உள்ள பொருட்களை பகுப்பாய்வு செய்யலாம், புகைப்படத்தில் உள்ள வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம். இருப்பினும், இதற்கு கட்டண சந்தா முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை மாதத்திற்கு $20 ஆகும். இதனால், பல பயனர்கள் இலவசமாக சாட் ஜிபிடியைப் பயன்படுத்துவது குறித்து தேடி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

ChatGPT-க்காக OpenAI நிறுவனத்திற்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினேன் - எலான் மஸ்க்

அந்த வகையில், இந்த GPT-4 அல்லது ChatGPT-4 இலவசமாகப் பயன்படுத்தும் வழியும் பிறந்துள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Bing AI, Bing Chat தளத்தில் GPT-4 கொண்டு வந்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் கார்ப்பரேட் துணைத்தலைவர் யூசுப் மெஹ்தி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "புதிய பிங் தளத்தில் GPT-4 கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், தேடலுக்குத் தனிப்பயனாக்கியுள்ளோம்." என்று தெரிவித்துள்ளார். 

அவரது ட்வீட்டுக்கு பயனர் ஒருவர் ‘நான் மீண்டும் காத்திருப்புப் பட்டியலில் பதிவு செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மூத்த மைக்ரோசாப்ட் நிர்வாகி, "நீங்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

Reddmatter: உலகையே மாற்றி அமைக்கும் ரெட் மேட்டர் சூப்பர் கண்டக்டர் கண்டுபிடிப்பு!
மைக்ரோசாப்ட் பிங் AI ஆனது ப்ரோமிதியஸ் முறையில்  கட்டமைக்கப்பட்டுள்ளது, இது மைக்ரோசாப்டின் Bing இணையத் தரவு மற்றும் OpenAI மொழி மாதிரியை ஒருங்கிணைத்து சிக்கலான கேள்விகளுக்கு உரையாடல் முறையில் பதிலளிக்கிறது. கூகுள் தேடலுக்கு சவால் விடும் வகையில் மைக்ரோசாப்ட் கடந்த மாதம் பிங்கை வெளியிட்டது. Bing AI அல்லது Bing Chat ஐப் பயன்படுத்த, பயனர்கள் Bing செயலியைப் பதிவிறக்கலாம் அல்லது Microsoft Edge உலாவியில் Bing தேடலைப் பயன்படுத்தலாம்

click me!