Poco X5 5G இந்தியாவில் அறிமுகம்! நம்பி வாங்கலாமா?

By Asianet Tamil  |  First Published Mar 15, 2023, 10:25 AM IST

POCO நிறுவனத்தின் புத்தம் புதிய POCO X5 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 7 விதமான 5G பேண்டுகள், 8GB ரேம்,ஸ்னாப்டிராகன் 695 SoC பிராசசர், முன்பக்கத்தில் 13MP கேமராவைக் கொண்டுள்ளது. ஃபோன் வெறும் 7.98mm தடிமன் கொண்டது. MIUI 13, ஆண்ட்ராய்டு 12 தளத்துடன் வருகிறது. 


இந்தியாவில் POCO X5 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. Poco X5 5G launched in India. இதில் 6.67″ FHD+ டிஸப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசசர், 5000mAh பேட்டரி என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இருப்பினும் வேறு ஏதும் குறைகள் உள்ளதா, விலைக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதை இங்குக் காணலாம்.

POCO நிறுவனத்தின் புத்தம் புதிய POCO X5 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 7 விதமான 5G பேண்டுகள், 8GB ரேம்,ஸ்னாப்டிராகன் 695 SoC பிராசசர், முன்பக்கத்தில் 13MP கேமராவைக் கொண்டுள்ளது. ஃபோன் வெறும் 7.98mm தடிமன் கொண்டது. MIUI 13, ஆண்ட்ராய்டு 12 தளத்துடன் வருகிறது. பின்புறத்தில் 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கேமரா உள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர். 5000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஏற்ப. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

Tap to resize

Latest Videos

மொத்தம் மூன்று வண்ண நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை: சூப்பர் நோவா கிரீன், வைல்டு கேட் ப்ளூ, ஜாகுவார் பிளாக் ஆகும். போனில் 5,000mAh பேட்டரி, 33 வாட் வேகமான சார்ஜிங் உள்ளதால், வெறும் 22 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் ஆகிவிடும் என்று போகோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

POCO X5 5G சிறப்பம்சங்கள்: 

திரை: 6.67-இன்ச் FHD+ (1080×2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே 
ரெப்ரெஷ் ரேட்: 120Hz 
டச் சாம்பிளிங்: 240Hz 
பிரைட்னஸ் அளவு: 1200 nits உச்ச பிரகாசம் 
பாதுகாப்பு அம்சம்: கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
பிராசசர்: ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8nm
ரேம் மெமரி: 6GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
கூடுதல் மெமரி:  மைக்ரோSD வசதி உள்ளது. 1TB வரை விரிவாக்கலாம்.
தளம்: MIUI 13 - ஆண்ட்ராய்டு 12
சிம் வகை: ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
கேமரா: 48MP பின்புற கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, LED ஃபிளாஷ், 13MP முன் கேமரா
சென்சார்கள்: பக்கவாட்டில் கைரேகை சென்சார், அகச்சிவப்பு சென்சார்
ஆடியோ ஜாக்: 3.5மிமீ ஆடியோ ஜாக்

5ஜி பேண்டுகள்: 5G (SA: N1/N3/N5/N8/N28/N40/N78, 5G NSA: N1/N3/N40/N78),

கூடுதல் நெட்வொர்க்: டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS + GLONASS, யுஎஸ்பி டைப் சி
சார்ஜர்: 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh சக்தி கொண்ட பேட்டரி
விலை: 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் - ரூ. 18,999 
8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ. 20,999.
சலுகைகள்: ஐசிஐசிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு 2,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

click me!